Karthi - மணிரத்னத்திடம் வசமாக மாட்டிய கார்த்தி.. ஏன் தெரியுமா?
சென்னை: Karthi (கார்த்தி) பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தபோது மணிரத்னத்திடம் பலமுறை மாட்டிக்கொண்டது தொடர்பாக நடிகர் கார்த்தி பேசியிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படக்குழு தீவிர புரோமோஷனில் ஈடுபட்டுவருகிறது. படத்தின் இயக்குநர் மணிரத்னம் மற்றும் படத்தில் நடித்தவர்கள் இதில் கலந்துகொண்டுவருகின்றனர்.

வந்தியத்தேவனாக கார்த்தி: கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக படைத்திருப்பார். புத்தகத்தை படிக்கும்போது வந்தியத்தேவனின் சேட்டைகளும், நடவடிக்கைகளும் அவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கும். எனவே படத்தில் யார் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த சூழலில் கார்த்தி அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். தனது நடிப்பிலும் மிகச்சிறப்பாக நாவலில் இருக்கும் வந்தியத்தேவனை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
புரோமோஷனில் கார்த்தி: இந்நிலையில் படத்தின் புரோமோஷனில் பேசிய கார்த்தி, "வந்தியத்தேவன் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் புத்தகத்தை முழுமையாக படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறை படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பும், படத்தின் ஸ்கிரிப்ட்டையும் புத்தகத்தில் உள்ள சீனையும் படித்துவிட்டுத்தான் படப்பிடிப்புக்கு செல்வேன்.
மணிரத்னத்திடம் மாட்டிய கார்த்தி: அப்படி ஒரு முறை செல்லும்போது, படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சி குறித்து மணிரத்னமிடம் சந்தேகம் கேட்டேன். அதற்கு அவர், "இது புத்தகத்தில் இடம் பெற்ற காட்சியா, அல்லது ஸ்கிரிப்ட்டில் உள்ள காட்சியா? என கேட்பார். அதுமட்டுமின்றி சில சமயங்களில், புத்தகம் படிப்பதை நிறுத்திவிட்டு ஸ்கிரிப்ட்டை முதலில் படி என்பார்.

வீரன் மட்டுமல்ல காதலரும்கூட: நான் சிறுவயதில் கரிகாலன் குறித்த கதைகளை கேட்டபோது அவரை வெறும் வீரம் நிறைந்த இளவரசன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், இப்போது புத்தகத்தை படித்தவடன்தான் அவர் ஒரு அழகான காதலர் என்பதை புரிந்துகொண்டேன். நீங்களும் புத்தகத்தை படித்தால், கரிகாலச்சோழன் உண்மையிலேயே யார் என்பதை புரிந்துகொள்வீர்கள்" என்றார்.
புக்கிங் ஓபன்: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாகிறது. இதனையொட்டி படத்துக்கான டிக்கெட் புக்கிங் ஓபனாகியுள்ளது. பெரிதும் ஆர்வத்தோடு இருக்கும் ரசிகர்கள் போட்டிப்போட்டு டிக்கெட்டுகளை புக் செய்துவருகிறார்கள். இந்தப் படமானது பான் இந்தியா படமாக வெளியாகிறது. முதல் பாகம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததால் இரண்டாம் பாகம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும், படக்குழுவிடமும் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











