சுல்தான் அனுபவங்கள் எப்படி...மனம் திறந்து பேசிய கார்த்தி
சென்னை : கைதி படத்தில் சீரியசான கேரக்டரில் நடித்த பிறகு, கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சுல்தான் படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி சமீபத்தில் கார்த்தி பகிர்ந்து கொண்டார்.
கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் ஏப்ரல் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கு முன் வெளியிடப்பட்ட சுல்தான் படத்தின் சிங்கிள் டிராக் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

20 நிமிடம் கதை கேட்டேன்
பேட்டியில் கார்த்தி கூறுகையில், டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் சுல்தான் படம் பற்றி 20 நிமிடங்கள் என்னிடம் கதை சொன்னார். உடனே எனக்கு பிடித்து விட்டது. அதில் ஹீரோ, வன்முறையை வெறுப்பவர் என்றார்.

ஆர்வத்தை தூண்டிய கதை
ஆனால் வீட்டில் 100 ரவுடிகளை கையாளக் கூடியவர் என்றார். அது தான் என் ஆர்வத்தை தூண்டியது. இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என நினைத்தேன். கதையை முடிவு செய்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரே நேரத்தில் 100 பேர் தங்கும் அளவிலான வீட்டை உருவாக்கினோம்.

நெப்போலியனுடன் முதல் சந்திப்பு
நான் முதல் முறையாக நெப்போலியன் சாரை சந்தித்தேன். அவர் சினிமாவில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் திரையுலக பயணம் பற்றி கூறினார். பல வேடங்களில் நடித்திருந்தாலும் , இதை தன் முதல் படமாக உணர்வதாக கூறினார்.

பிரகாசமாக்கிய யோகி பாபு
அவர் ஒரு உணர்வில் இருந்து மற்றொரு உணர்விற்கு ஈஸியாக மாறி விடுகிறார். யோகி பாபு தனது நகைச்சுவையால் செட்டையே பிரகாசமாக்கி விடுவார். ராஷ்மிகாவிற்கு வலிமையான கேரக்டர். கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார்.
புத்துணர்ச்சி தந்த சுல்தான்
இதுவரை இது போன்ற கிராமத்து வேடத்தில் யாரும் நடித்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பெர்ஃபெக்ஷன் காட்டி உள்ளார். ரொம்ப மென்மையான, பழகுவதற்கு எளிமையான பெண். கைதி படத்திற்கு பிறகு சுல்தான் போன்ற படங்கள் பண்ணுவது மனதை லேசாக்கி, புத்துணர்வு அளித்துள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











