தமிழில் கலக்குவாரா ராஷ்மிகா? உற்சாகப்படுத்தும் சுல்தான் ஷூட்டிங் நிறைவு.. கார்த்தி ஹேப்பி ட்வீட்!
சென்னை: தான் நடித்து வரும் சுல்தான் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் ஹிட்டானது.
இதையடுத்து அவர் நடித்து வந்த படம், சுல்தான். இதை ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

ராஷ்மிகா மந்தனா
கார்த்தி ஜோடியாக, தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர் தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும் தமிழில் நேரடியாக அறிமுகமாகும் படம் இது. ட்ரீம் வாரியர் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. விவேக் - மெர்வின் இசை அமைக்கின்றனர்.

பெரும்பாலான
இதன் ஷூட்டிங் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. பெரும்பாலான காட்சிகள் முடிந்து விட்டது. குறைவான காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருந்தது. இந்தப் படத்தை சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீஸுக்கு பிறகு வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

படப்பிடிப்பு ஓவர்
ஆனால், கொரோனா தொற்று காரணமாக, படப்பிடிப்பு தடைபட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இதன், ஷூட்டிங் மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் இதன் ஷூட்டிங் தொடங்கி நடந்துவந்தது. இப்போது, மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக நடிகர் கார்த்தி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

உற்சாகப்படுத்தும் கதை
இதுபற்றி அவர், 'ஷூட்டிங் முடிந்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முன் இந்த கதையின் ஐடியாவை கேட்ட நாளில் இருந்தே, இந்த கதை தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. எனது பெரிய தயாரிப்புகளில் இதுவும் ஒன்று. சிறப்பாக உழைத்த மொத்தப் படக்குழுவுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.

மகேஷ் பாபு
கன்னடத்தில் இருந்து தெலுங்கு சினிமாவுக்கு வந்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த சில தெலுங்கு படங்கள் ஹிட்டாக, அங்கு டாப் நடிகையாக இருக்கிறார். மகேஷ்பாபு ஜோடியாக சரிலேரு நீக்கெவ்வரு, நிதின் ஜோடியாக நடித்த பீஷ்மா படங்கள் ஹிட்டானதால் அவருக்கு அதிக வரவேற்பு. இப்போது அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் நடிக்கிறார். தெலுங்கை போல தமிழில் டாப் ஹீரோயினாக முயற்சி செய்துவருகிறார் ராஷ்மிகா. அதற்கு சுல்தான் பிள்ளையார் சுழி போடும் என்பது அவர் நம்பிக்கை.


Click it and Unblock the Notifications











