ஏஐயால் எதிர்காலம் என்ன ஆகும்?.. கார்த்தி சொன்ன விஷயம்.. இவ்வளவு உறுதியா பேசுறாரே.. நடக்குமா?
சென்னை: நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும்; வணிக ரீதியாக சக்சஸ் ஆகவில்லை. அடுத்ததாக அவர் நடித்த வா வாத்தியார் திரைப்படம் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் அப்படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பம் பற்றி கார்த்தி பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ்நாடு அரசு சார்பாக பத்து லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி, மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட் நடிகர்கள் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி பேசினார்கள். அவர்களில் கார்த்தி பேசுகையில் ஏஐ தொழில்நுட்பம் பற்றி பேசிய விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கார்த்தி பேச்சு: அவர் விழாவில் பேசுகையில், "தமிழ்நாட்டுக்கு எப்போதும் ஒரு சிறப்பு இருக்கிறது. ஒரு மாணவன் நன்றாக படிக்கிறான் என்றால்; சொத்தை விற்றாவது படிக்க வைத்துவிடுவார்கள். கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சினிமாவுக்கு செல்கிறேன் என்று நான் அப்பாவிடம் சொன்னபோது அவர் என்னிடம், ' எது கை கொடுக்கவிலலி என்றாலும் படிப்பு கை கொடுக்கும். எனவே முதலில் படி' என்றுதான் சொன்னார்.

கல்விதான் உதவுகிறது: அதற்கு பிறகுதான் நான் பொறியியல் மற்றும் மாஸ்டர்ஸ் படித்தேன். பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு கல்விதான் உதவுகிறது. எது சரி எது தவறு உள்ளிட்ட பல விஷயங்களை தெரிந்துகொள்வதற்கு கல்வியே பயன் அளிக்கும். நான் அமெரிக்காவுக்கு சென்று படிக்கும்போது அரசு பள்ளியில் படித்தவர்கள்தான் பெரிய பொறுப்பில் இருந்தார்கள். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டியது இப்போது முக்கியமான விஷயமாக இருக்கிறது.
ஏஐ வளர்ச்சி: இப்போது ஏஐ வளர்ச்சியடைந்திருக்கும் காலகட்டத்தில் அரசு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது மிக மிக முக்கியமான அம்சமாகும். இதை ஏற்படுத்திக்கொடுத்த அரசுக்கு நன்றி. ஏஐ மூலம் நிறைய பேருக்கு வேலை பறிபோகும் என்று சொல்கிறார்கள். ஆனால் பல தொழி முனைவோர்கள் இந்தியாவில் இது வளர்ச்சியை ஏற்படுத்தும் என சொல்கிறார்கள்" என்றார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஏஐயால் நடிகைகளுக்கு சிக்கல்: முன்னதாக ஏஐயின் வளர்ச்சி ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும்; அதை வைத்து சில விஷமிகள் நடிகைகளை ஆபாசமாக சித்தரித்துவருவதும் ஒருபக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நிவேதா தாமஸ், ராஷ்மிகா மந்தனா, பிரியங்கா மோகன் என பல நடிகைகள் அதனால் சமீப காலத்தில் பாதிக்கப்பட்டார்கள் என்பதும்; மிகத்தீவிரமாக ரியாக்ட் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











