சர்தார் ட்ரெய்லர் அப்டேட் கொடுத்த படக்குழு… வெறித்தனமாக காத்திருக்கும் கார்த்தி ரசிகர்கள்…

சென்னை: கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளீயை முன்னிட்டு வரும் 21ம் தேதி வெளியாகிறது.

பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள சர்தார் படத்தில் கார்த்தி பல கெட்டபுகளில் நடித்துள்ளார்.

கார்த்தி ரா அதிகாரியாக நடித்துள்ள சர்தார் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

ட்விட்டரில் பெயர் மாற்றிய கார்த்தி

ட்விட்டரில் பெயர் மாற்றிய கார்த்தி

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் கார்த்தி வந்தியத்தேவனாக நடித்திருந்தார். இந்த கேரக்டரில் கார்த்தியின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷௌக்கான தனது டிவிட்டர் அக்கவுண்டை 'வந்தியத்தேவன்' என மாற்றியிருந்த கார்த்தி, இப்போது மீண்டும் தனது பெயருக்கே மாற்றியுள்ளார். இதனையடுத்து சர்தார் படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாக இருக்கிறார் கார்த்தி.

ஸ்பை திரில்லர் ஜானரில் சர்தார்

ஸ்பை திரில்லர் ஜானரில் சர்தார்

பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள சர்தார் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கார்த்தியுடன் ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஸ்பை திரில்லர் ஜானரில் ஆக்சன் படமாக உருவாகியுள்ள சர்தாரில், கார்த்தி ரா அதிகாரியாக நடித்துள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் ரா அதிகாரியின் கேரக்டருக்காக 2 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தததாகவும் கார்த்தி கூறியிருந்தார். ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சர்தார் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

ட்ரெய்லர் அப்டேட் கொடுத்த சர்தார் டீம்

ட்ரெய்லர் அப்டேட் கொடுத்த சர்தார் டீம்

சர்தார் படத்தின் டீசர் கடந்த மாதம் 29ம் தேதி வெளியானது. இந்த டீசரில் கார்த்தி பல தோற்றங்களில் ரகசிய ஏஜெண்டாக நடித்து மிரட்டியிருந்தார். கார்த்தியின் இன்ட்ரோ சீன், செம்ம மாஸாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கார்த்தி பாடிய 'ஏறுமயிலேறி' என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டது. தெருக்கூத்து வடிவில் உருவாகியிருந்த இந்தப் பாடலுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், சர்தார் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாளை ட்ரெய்லர்

நாளை ட்ரெய்லர்

சர்தார் படத்தின் ப்ரோமோஷன்கள் ஒருபக்கம் பிஸியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை (அக் 14) சர்தார் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் கார்த்தி ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். சர்தார் படம் ரிலீஸுக்கு பின்னர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X