ஜப்பான் படம் சுத்த வேஸ்ட்.. முதல் நாளே இருக்கைகள் காலி.. வறுத்தெடுத்த ரசிகர்!
சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தில் முதல் பாதி, இரண்டாம் பாதி இரண்டுமே வேஸ்ட் என்று ரசிகர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான ஜப்பான் படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் சுனில், அணு இமானுவேல், கேஎஸ் ரவிக்குமார், விஜய் மில்டன், ராஜேஷ் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜப்பான்: கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தில் வித்தியாசமான தோற்றத்திலும், கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களை எடுக்கும் ராஜு முருகன் ஒரு கமர்சியல் படத்தை இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதை: கொள்ளையன் கார்த்தி அந்த பணத்தை வைத்து சினிமாவில் நடிப்பது, பணத்தை ஜாலியாக செலவு செய்து வருகிறார். இந்த நேரத்தில், நகைக்கடை ஒன்றில், 200 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த கொள்ளையை கார்த்தி தான் செய்திருக்க வேண்டும் என்று போலீசார் அவரை தேடுகின்றனர். கடைசியில் கார்த்தி போலீசாரிடம் பிடிபட்டாரா? நகைக்கடையை கொள்ளையடித்தது யார் என்பதுதான் ஜப்பான் படத்தின் கதை.
முதல் நாளே இருக்கைகள் காலி: நேற்று திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஜப்பான் படம் பார்த்த ரசிகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், முதல் நாள் காட்சியிலே 45 இருக்கைகள் காலியாக இருந்தன. கார்த்திக்கு அஜித், விஜய், ரஜினி அளவுக்கு ரசிகர்களின் ஆதரவு இல்லை.
நடிக்க தெரியவில்லை: அது மட்டுமில்லாமல் முதல் பாதி, இரண்டம் பாதி ரெண்டுமே வேஸ்ட். கார்த்தி ஓவர் கான்ஃபிடன்டாக நடித்துள்ளார். எந்த வட்டார வழக்கையும் அவர் சரியாக பேசவில்லை. குடிகாரர் போல நடிக்க தெரியவில்லை. இன்னும் மூன்று மாசம் அவருக்கு டிரைனிங் கொடுக்க வேண்டும் என்று ஜப்பான் படம் பார்த்து கடுப்பில் பேட்டி அளித்துள்ளார். இந்த வீடியோவை ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பரிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











