சிறுத்தை 2 எடுக்க கார்த்தியுடன் பேச்சுவார்த்தை: ஹீரோயின் தமன்னாவா?
சென்னை: சிறுத்தை 2 படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்த படம் சிறுத்தை. அதில் கார்த்தி போலீஸ்காரர் ரத்னவேல் பாண்டியனாகவும், திருட்டுப்பய ராக்கெட் ராஜாகவும் நடிப்பில் கலக்கி இருந்தார்.
கார்த்தியுடன் சேர்ந்து சந்தானம் காட்டுப்பூச்சியாக நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார்.

சிறுத்தை 2
சிறுத்தையின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.

அஜீத்துடன் சிவா பிசி
சிறுத்தை இயக்குனர் சிவா அஜீத் படத்தில் பிசியாக இருக்கிறார். அதை முடித்து விட்டு சிறுத்தை 2 படத்தை எடுப்பாரோ?

பிரபுதேவாவும் ரீமேக் செய்வாரா?
சிறுத்தை படத்தை பிரபுதேவா இந்தியில் ரவுடி ராத்தோர் என்ற பெயரில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வெற்றியும் கண்டார். தற்போது சிறுத்தை 2 வந்தால் அதையும் ரீமேக் செய்வாரா?


Click it and Unblock the Notifications