அந்த இயக்குநர் இல்லையாம்.. இவர் கூடத்தான் மீண்டும் கை கோர்க்கப் போகிறாராம் கார்த்தி?

சென்னை: சுல்தான், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி எந்த இயக்குநர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

Recommended Video

இது Celebrity Rakshabandhan • Suriya, Arun Vijay, Chiranjeeve வீட்டு விசேஷம்

கோலிவுட்டில் நடிகர் கார்த்திக்கு என்று தனி மார்க்கெட் இருக்கிறது. அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே வெற்றியடைவதும் குறிப்பிடத்தக்கது.

கைதி, தம்பி படங்களை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

ரெமோ இயக்குநர்

ரெமோ இயக்குநர்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் சுல்தான். கொரோனா லாக்டவுன் காரணமாக 90% ஷூட்டிங்குடன் படம் அப்படியே நிற்கிறது. இந்நிலையில், விரைவில் ஷூட்டிங் நடத்தி படத்தை முடிக்க தயாரிப்பு நிறுவனம் தயாராகி உள்ளது.

இரும்புத்திரை இயக்குநர்

இரும்புத்திரை இயக்குநர்

விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றியை தமிழ் சினிமாவுக்கு தந்த இயக்குநர் பி.எஸ். மித்ரன், சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தையும் இயக்கி இருந்தார். அவரது இயக்கத்தில் அடுத்ததாக கார்த்தி நடிக்கப் போகிறார் என்கிற தகவல்களும் பரவின.

மீண்டும் இணையும் கூட்டணி

மீண்டும் இணையும் கூட்டணி

ஆனால், தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கப் போவது இல்லை என்றும், அதற்கு பதிலாக சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மேலும், அந்த படத்தை கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்க உள்ளாராம்.

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவனாக நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். சுல்தான் படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையுடன் பொன்னியின் செல்வன் படத்தில் தான் கவனம் செலுத்துவார் என்றும், முத்தையா படத்தை சைடு கேப்பிலே முடித்துக் கொடுக்க உள்ளார் என்றும் பலவிதமான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் எதையும் உறுதி செய்யமுடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X