Karthi: சூப்பர் ஸ்டார் ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனால் வந்த சோதனை... ரூட் மாறிய கார்த்தி
சென்னை: கார்த்தி - H வினோத் கூட்டணியில் உருவாகவிருந்த தீரன் அதிகாரம் 2 தாமதமாகும் என சொல்லப்படுகிறது. கமலின் KH 233 ஷூட்டிங் முடிந்ததும் தான் தீரன் அதிகாரம் 2 உருவாகும் என தகவல்.

ரூட் மாறிய கார்த்தி
கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. கார்த்தியின் 25வது படமாக உருவான ஜப்பான், எதிர்பார்த்த அளவில் வெற்றிப் பெறவில்லை. இதனையடுத்து தனது 26, 27வது படங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. முன்னதாக கைதி 2 அல்லது தீரன் அதிகாரம் இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்திருந்தார். ஆனால், அந்த இரண்டு படங்களுமே தாமதமாகும் என சொல்லப்படுகிறது.
2017ம் ஆண்டு வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஹெச் வினோத் இயக்கிய இந்தப் படம் உண்மைச் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு உருவானது. ஆக்ஷன் ஜானரில் உருவான இந்தப் படத்தில் கார்த்தி போலீஸ் ஆபிஸராக நடித்திருந்தார். தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அதன் இரண்டாம் பாகம் எடுக்க ஹெச் வினோத் முடிவு செய்திருந்தார்.
கார்த்தியும் அதற்காக கால்ஷீட் கொடுத்திருந்ததாக சொல்லப்படுகிறது. தீரனுக்குப் பின்னர் தொடர்ச்சியாக அஜித்துடன் 3 படங்களில் இணைந்த ஹெச் வினோத், இப்போது கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்துள்ளார். அதாவது கமலின் 233வது படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதனால் தான் தீரன் அதிகாரம் இரண்டு இப்போதைக்கு தொடங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. KH 233 படத்துக்கு முன்பே தீரன் அதிகாரம் இரண்டு முடித்துவிட வேண்டும் என வினோத் பிளான் செய்திருந்தாராம்.
அதனால் ஹெச் வினோத்துக்காக காத்திருந்த கார்த்தி, வேறு வழியில்லாமல் தனது 27வது படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டாராம். முன்னதாக ரஜினியால் கார்த்தியின் கைதி 2ம் பாகம் ஷூட்டிங் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது. கார்த்தி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கைதி படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்தப் படத்திலிருந்து தான் லோகேஷின் LCU தொடங்கியது. இதனால் கைதி 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதால், கைதி 2 ஷூட்டிங்கும் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களுக்கும் கொடுத்த கால்ஷீட்டை தான் தற்போது நலன் குமாரசாமி, பிரேம் குமார் ஆகியோரின் படங்களுக்கு கொடுத்துவிட்டாராம் கார்த்தி. இதனால், கைதி 2, தீரன் அதிகாரம் 2 என இந்த இரண்டு படங்களும் 2025ல் தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











