படமாகும் பொன்னியின் செல்வன்: வந்தியத்தேவன் கார்த்தி, குந்தவை கீர்த்தி
Recommended Video

சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் இவர்கள் தான் என்று கூறி ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை எத்தனை முறை படித்தாலும் ரசிக்காமல் இருக்க முடியாது. அத்தகைய நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
இந்நிலையில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க யார், யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ஜெயம் ரவி
ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும், பெரிய பழுவேட்டரையராக தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும், சுந்தர சோழராக அமிதாப் பச்சனும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய்
குந்தவையாக கீர்த்தி சுரேஷும், நந்தினியாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும் நடிக்கிறார்களாம். ஆனால் கம்பீரமான குந்தவை கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி
பொன்னியின் செல்வன் படத்தில் எங்க அண்ணன் சிம்பு நடிக்கிறதா சொன்னாங்க, அவர் எங்கய்யா என்று எஸ்.டி.ஆர். ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விஜய் சேதுபதியிடம் டேட்ஸ் இல்லாததால் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லையாம்.

நந்தினி
குந்தவையாக கீர்த்தி சுரேஷம், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?. வந்தியத் தேவனாக கார்த்தி அசத்துவார் என்று கருதுகிறீர்களா?. பிற நடிகர்கள் தேர்வு குறித்தும் உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


Click it and Unblock the Notifications











