கடல் மாதா சாட்சியாக ப்ளூ ஸ்டார் ஒளிப்பதிவாளர் தமிழழகன் திருமணம்.. பா. ரஞ்சித், கார்த்தி என பலர் ஆஜர்

சென்னை: சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் எல்லாம் கடற்கரை ரெசார்ட்டில் கடலை பார்த்துக் கொண்டே திருமணம் செய்வது போன்ற ட்ரீம் வெட்டிங்கை செய்து வருகின்றனர். நடிகை நயன்தாரா மகாபலிபுரம் அருகே உள்ள ரெசார்ட்டில் திருமணம் செய்துக் கொண்டார். நடிகை வரலட்சுமி சரத்குமார் தாய்லாந்துக்கே சென்று ட்ரீம் வெட்டிங் செய்திருந்தார்.

இந்நிலையில், ப்ளூ ஸ்டார், ஓ2 மற்றும் மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன் - ஸ்ருதி என்பவரை இன்று திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமணத்தில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

cinematographer thamizh azhagan celebrity marriage karthi

தமிழழகன் - ஸ்ருதிக்கு தாலி கட்டிய புகைப்படங்களும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நேரில் மணமக்களை வாழ்த்திய புகைப்படங்களும் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

cinematographer thamizh azhagan celebrity marriage karthi

ப்ளூ ஸ்டார் ஒளிப்பதிவாளர்: கடந்த ஆண்டு பா. ரஞ்சித் தயாரிப்பில் அவரது நண்பரான ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நயன்தாரா நடித்த O2, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மன்மத லீலை உள்ளிட்ட படங்களுக்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

cinematographer thamizh azhagan celebrity marriage karthi

கார்த்தி முதல் பா. ரஞ்சித் வரை: வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீலை படத்தில் ஒளிப்பதிவாளராக தமிழழகன் பணியாற்றிய நிலையில், வெங்கட் பிரபு திருமணத்தில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதே போல இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்திலும் பணியாற்றிய நிலையில், பா. ரஞ்சித்தும் வந்து வாழ்த்தினார். மேலும், நடிகர்கள் கார்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

cinematographer thamizh azhagan celebrity marriage karthi

கடல் மாதா சாட்சியாக: கடற்கரை ரெசார்ட்டில் ஓபன் செட் போட்டு நடைபெற்ற திருமணத்தில் திருமண மேடைக்கு பின்னர் பார்த்தால் கடல் தெரிவது போல அழகான இயற்கை சூழலில் கடல் அன்னை சாட்சியாக தனது திருமணத்தை ஒளிப்பதிவாளர் தமிழழகன் செய்துள்ளார். அசோக் செல்வன் படப்பிடிப்பில் பிசியாக உள்ள நிலையில், கீர்த்தி பாண்டியன் திருமணத்தில் பங்கேற்றுள்ளார். மேலும், ரமேஷ் திலக், மெட்ராஸ் ஜானி, ரம்யா என்.எஸ்.கே, தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இயக்குநர் ஜெயக்குமார், எழுத்தாளர் தமிழ் பிரபா உள்ளிட்ட பலர் திருமணத்தில் பங்கேற்றனர்.

cinematographer thamizh azhagan celebrity marriage karthi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X