சர்தார் படப்பிடிப்பை துவக்குகிறார் கார்த்தி...எப்போ தெரியுமா
சென்னை : பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் அடுத்த படியாக நடிக்கிறார் கார்த்தி. இந்த படத்தில் ஹீரோயின்களாக ராக்ஷி கன்னா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
த்ரில்லர் படமான இதில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவற்றில் ஒரு கேரக்டரில் கார்த்தி போலீசாக நடிக்கிறாராம். இந்த படத்திற்காக ரூ.2 கோடியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டதாக முன்பு கூறப்பட்டது.

இந்த வாரம் சர்தார் படப்பிடிப்பு
லேட்டஸ்டாக இந்த வாரம் சர்தார் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாம். கொரோனா பரவல் காலம் என்பதால் படத்தின் பெரும்பாலான பகுதிகள் செட்டில் தான் எடுக்கப்பட உள்ளதாம். இதற்காக தான் ரூ.2 கோடியில் பிரம்மாண்ட செட் உருவாக்கப்பட்டதாம்.

முக்கிய வேடத்தில் சிம்ரன்
லக்ஷ்மணனின் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்ரன் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பல்வேறு பிரச்சனைகளை கடந்து சர்தார் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாக டைரக்டர் தெரிவித்துள்ளார்.

போலீஸ் கெட்அப்பில் கார்த்தி
தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. அத்துடன் சர்தார் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள உள்ளார். கார்த்தி ஏற்கனவே சிறுத்தை படத்தில் போலீஸ் கெட்அப்பில் நடித்திருந்தார். இந்த ரோல் கார்த்திக்கு புதிய இமேஜை பெற்று தந்தது.

மீண்டும் இரட்டை வேடம்
சிறுத்தை படத்திற்கு பிறகு கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க துவங்கி விட்டது. தந்தை - மகன் கேரக்டர்களில் தான் கார்த்தி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











