அடுத்தும் ஆக்‌ஷன் அதிரடிக்கு ரெடியாகிறார் கார்த்தி... மீண்டும் கை கோர்க்கிறது கொம்பன் டீம்

By

சென்னை: நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தை மீண்டும் இயக்க உள்ளார் முத்தையா.

சசிகுமார் நடித்த குட்டிப்புலி படம் மூலம் இயக்குனர் ஆனவர் முத்தையா. இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்தி நடித்த கொம்பன் படத்தை இயக்கினார்.

இதில் ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா, கருணாஸ், தம்பி ராமையா, சூப்பர் சுப்பராயன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆக்‌ஷன் அதிரடி படமான இது ஹிட்டானது.

கொடிவீரன்

கொடிவீரன்

இதையடுத்து விஷால் நடித்த மருது, சசிகுமார் நடித்த கொடிவீரன், கவுதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் படங்களை இயக்கினார் முத்தையா. இந்தப் படங்கள் வசூல் ரீதியாக பெரிதாக கவனிக்கப்படவில்லை.

மீண்டும் கார்த்திக்

மீண்டும் கார்த்திக்

இந்நிலையில் மீண்டும் கார்த்திக் நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். அவர் சொன்ன கதை பிடித்திருந்ததால், கார்த்தி ஓகே சொல்லியுள்ளார். இந்தப் படத்தை சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

கொம்பன் படத்தைப் போல, இதுவும் கிராமத்துப் பின்னணியில் உருவாகும் படம். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. தற்போது, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார் கார்த்தி. இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வருகிறது.

மித்ரன் இயக்கத்தில்

மித்ரன் இயக்கத்தில்

அடுத்து மித்ரன் இயக்கும் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்திலும் கார்த்தி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X