முத்தையாவுடன் மீண்டும் கை கோர்க்கும் கார்த்தி...'கொம்பன் 2' தயாராகிறதா ?
சென்னை : கார்த்தி நடித்த சுல்தான் படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆக்ஷன் கலந்த, பொழுதுபோக்கு டிரைலரும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது லேட்டஸ்ட் தகவலாக டைரக்டர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.

இதற்கு முன் கார்த்தி நடித்த கொம்பன் படத்தை முத்தையா தான் இயக்கி இருந்தார். அது மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்தது. முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க போகும் புதிய படத்தை சூர்யா தான் தயாரிக்க போகிறார். அதே சமயம் இது பற்றிய உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்த படத்திலும் லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா, தம்பி ராமைய்யா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

கொம்பன் படத்தில் நடித்த அதே நடிகர், நடிகைகள் மீண்டும் நடிக்க உள்ளதால் இது கொம்பன் 2 ஆக கூட இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சுல்தான் படத்திற்கு பிறகு கார்த்தி தற்போது, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில படங்களில் கமிட் ஆகி உள்ளார்.
அதனால் இந்த படங்களின் வேலைகள் முடிந்த பிறகு முத்தையா உடனான புதிய படம் பற்றி இறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











