Vaa Vaathiyaar: பருத்திமூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம்.. வரமாட்டேன்னு அடம்பிடிக்கும் ‘வா வாத்தியார்'
சென்னை: நடிகர் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்த ராஜ், ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் வா வாத்தியார். படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. படத்தை நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் நாளை அதாவது டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்திருந்த நிலையில், படம் நாளை வெளியாகாது என்று தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு அப்செட்டைக் கொடுத்துள்ளது.
வா வாத்தியார் படம் கடந்த ஆண்டு இறுதியில் தயாராகிவிட்டது. படத்தை எப்போது ரிலீஸ் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. படம் மார்ச் மாதத்தில் வெளியாகும், ஏப்ரல் மாதத்தில் வெளியாகும், ஜூலையில் வெளியாகும், செப்டம்பரில் வெளியாகும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். இது எப்படி இருந்தது என்றால் புலி வருது புலி வருது என்று ஒரு கதை சொல்வார்கள் அல்லவா, அது போல இருந்தது.

பருத்தி மூட்டை: இறுதியாக டிசம்பர் மாதத்தில் படம் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்து புரோமோசன் வேலைகளைப் பார்த்தது. அட, இம்முறை புலி கட்டாயம் வருது என்று அனைவரும் தயாராக இருந்தார்கள். தமிழ்நாடு மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திராவில் படத்திற்கான தியேட்டர்கள் எல்லாம் அலாட் செய்யப்பட்டு தயாராக இருக்கும் போது, படக்குழு தனது சமூக வலைதள பக்கத்தில், வா வாத்தியார் படம் விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு அப்செட்டைக் கொடுத்துள்ளது. அதாவது புலி இப்போதும் வரவில்லையா என்ற சலிப்பை ஏற்படுத்தி உள்ளது. சில ரசிகர்களோ, இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம்.
என்ன பிரச்னை?: படம் ரிலீஸ் ஆவதில் உள்ள பிரச்னை என்னவென்று பார்த்தால், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தான். அதாவது, வா வாத்தியார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அவர் கடனாக வாங்கிய ரூபாய் 21 கோடிகளை திரும்பச் செலுத்தினால் தான் படத்தை ரிலீஸ் செய்வதற்கான தடையை நீக்க முடியும் என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் படம் வெளியாகுமா இல்லையா என்ற சந்தேகத்தில் இருந்தனர். இந்நிலையில் படம் வெளியாகது என்று படக்குழு சொல்லாமல் சொல்லி உள்ளது.


Click it and Unblock the Notifications











