நடிகர் சங்க கட்டிடத்திற்கு கார்த்தி ரூ.1 கோடி, விஷால் ரூ.25 லட்சம் நிதி: இப்போ தான் கொடுக்கணுமா?

By Siva

Recommended Video

Nadigar Sangam: சங்க கட்டிட நிதிக்காக கார்த்தி ரூ.1 கோடி, விஷால் ரூ. 25 லட்சம்- வீடியோ

சென்னை: நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் நேரத்தில் சங்க கட்டிட நிதிக்காக பொருளாளர் கார்த்தி ரூ. 1 கோடியும், பொதுச் செயலாளர் விஷால் ரூ. 25 லட்சமும் அளித்துள்ளனர்.

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தேர்தல் நாள் அன்று வாக்களிக்க வசதியாக படப்பிடிப்புகளை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுகிறோம் என்று கூறித் தான் பதவிக்காலம் முடிந்தும் தேர்தலை நடத்தாமல் இருந்தது விஷால் அடங்கிய பாண்டவர் அணி.

கலை நிகழ்ச்சி

கலை நிகழ்ச்சி

நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட நிதி திரட்ட சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி, மலேசியாவில் கலை நிகழ்ச்சி எல்லாம் நடத்தினார்கள்.
அப்படியும் போதிய பணம் கிடைக்கவில்லை என்று கூறி மேலும் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டனர். ஆனால் அது முடியாமல் போனது. இந்நிலையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்டிட பணிக்காக நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ரூ. 1 கோடியும், பொதுச் செயலாளர் விஷால் ரூ. 25 லட்சமும் அளித்துள்ளனர்.

அதிருப்தி

அதிருப்தி

கட்டிட நிதிக்காக பணம் கொடுக்க வேண்டும் என்கிற ஞானோதயம் விஷாலுக்கும், கார்த்திக்கும் தேர்தல் நேரத்தில் தான் வருமோ என்று நடிகர் சங்கத்தில் உள்ளவர்களே முணுமுணுக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி நிதி அளிப்பது சரி அல்ல என்றும் பேசப்படுகிறது.

விஷால்

விஷால்

வரும் 23ம் தேதி நடக்கும் தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் திருமண மண்டபம் கட்ட பணம் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

கார்த்தி

கார்த்தி

எந்த தேர்தல் வந்தாலும் விஷால் போட்டியிடுவார் என்று கலாய்த்த நேரத்தில் அவர் மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் பெரும் பிரச்சனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக்கு எதுக்கு விஷால் சவகாசம். தேவையில்லாமல் விஷாலுடன் சேர்ந்து தன் பெயரை கெடுத்துக் கொள்கிறாரே என்று அவரின் நலம் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X