»   »  'தீரன் அதிகாரம் ஒன்று'... மீண்டும் போலீஸ் யூனிஃபார்ம் போடும் கார்த்தி!

'தீரன் அதிகாரம் ஒன்று'... மீண்டும் போலீஸ் யூனிஃபார்ம் போடும் கார்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில நடிகர்களுக்கு காக்கிச் சட்டையை அத்தனை சீக்கிரம் விட முடிவதில்லை. கார்த்தியும் அப்படித்தான்.

சிறுத்தையில் முதல் முறையாக காக்கிச் சீருடை அணிந்த கார்த்தி, அதில் கிடைத்த வெற்றியைப் பார்த்து அலெக்ஸ் பாண்டியனிலும் போலீசாக வந்தார். ஆனால் எடுபடவில்லை.

Karthi to wear Kaakki again

இப்போது மீண்டும் போலீஸ் யூனிபார்ம் போடுகிறார் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்காக. இதில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை 'சதுரங்க வேட்டை' புகழ் எச் வினோத் கதை, திரைகதை, வசனம் எழுதி டைரக்ட் செய்கிறார்.

இதன் படபிடிப்பு சென்னையில் ஜனவரி முதல் வாரம் முதல் ஆரம்பமாகிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரகாஷ்பாபு , எஸ்ஆர் பிரபு தயாரிக்கிறார்கள்.

English summary
Karthi is wearing police uniform again for Dheeran Athikaran Ondru movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil