Karthi: கார்த்தி மகன் இப்படி வளர்ந்துட்டாரே.. தைப்பூச நாளில் குடும்பத்துடன் திருப்பதியில் தரிசனம்!

திருப்பதி: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் தற்போது, டாப் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரது நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆக உள்ள படம், வா வாத்தியார். தற்போது இவர் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். தைப்பூச நாளான இன்று கார்த்தி தனது குடும்பத்துடன் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் தரிசனம் செய்துள்ளார். கோவில் வளாகத்தில் கார்த்தியைப் பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Karthi Tirupati Vaa Vaathiyaar

நடிகர் கார்த்தி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொருளாளராக உள்ள கார்த்தி, தற்போது சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான படங்கள் என்றால் அது, ஜப்பான், மெய்யழகன் மற்றும் கங்குவா ஆகிய படங்கள்தான். இதில் ஜப்பான் அவரது 25 வது படமாக வெளியானது. ஆனால் ஜப்பான் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் படமாக மாறவில்லை. அதேபோல் கங்குவா படத்தில் கார்த்தி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல், இரண்டாம் பாகத்தில் வில்லனாகவும் நடிக்கிறார். ஆனால் இரண்டாம் பாகம் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Karthi Tirupati Vaa Vaathiyaar

வா வாத்தியார்: கடந்த ஆண்டில் கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் மற்றும் கங்குவா அவரது திரை வாழ்க்கையில் எதிர்பார்த்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால்தான் வா வாத்தியார் படத்தையும் இன்னும் ரிலீஸ் செய்யாமல் உள்ளார்கள் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் மெய்யழகன் படம் பெரும் வெற்றிப் படமாக விமர்சன ரீதியாக மாறியது. படத்திற்கு சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டு கிடைத்தது. இப்படியான நிலையில் இந்த ஆண்டு, கார்த்திக்கு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்துள்ளார்.

Karthi Tirupati Vaa Vaathiyaar

கார்த்தி குடும்பம்: திருப்பதி கோவிலுக்கு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடனும் கார்த்தி சென்று வழிபட்டுள்ளார். அதாவது, கார்த்தி திருப்பதிக்கு தனது தாயார் லட்சுமி, மகன் கந்தன் உள்ளிட்டோருடன் சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கார்த்தியை கோவில் வளாகத்தில் பார்த்த ரசிகர்கள் கார்த்தியுடன் புகைப்படம், செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். மேலும், சிலர் கார்த்தியுடன் கைகுலுக்கி அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Karthi Tirupati Vaa Vaathiyaar

கார்த்தி மகன்: கார்த்தியின் மகனைப் பார்த்த இணையவாசிகள், கார்த்தியின் மகன் இவ்வளவு வளர்ந்து விட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு கார்த்திக்கு நல்ல ஆண்டாக அமையவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தைப்பூச நாளானது, முருகருக்கு தானே சிறப்பான நாள், ஆனால் கார்த்தி இந்த நாளில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து திருப்பதி சென்றுள்ளாரே என கேள்வி எழுப்பி வருகின்றனர். திருப்பதிக்கு தரிசனம் செய்ய வந்த கார்த்திக்கு தேவஸ்தான நிர்வாகத்தினர் உரிய பாதுகாப்பும் மரியாதையும் அளித்தார்கள்.

Karthi Tirupati Vaa Vaathiyaar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X