திரைத் துளி
செக் திரும்பி வந்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கார்த்திக் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.கோர்ட்டில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த படத் தயாரிப்பாளர் பாஸ்கர்ராஜ் என்பவர் கார்த்திக் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.அதில், கார்த்திகை வைத்து படம் எடுக்க முடிவு செய்து கால்ஷீட் வாங்கினேன். அட்வான்ஸாக ரூ. 5லட்சம்கொடுத்தேன். ஆனால் திடீரென்று படத்தில் நடிக்க கார்த்திக் மறுத்து விட்டார். இதனால் எனக்கு ரூ. 20லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
எனது அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, செக் கோடுத்தார். ஆனால் பணமில்லை என்று கூறிவங்கியில் இருந்து செக் திரும்பி விட்டது. எனவே கார்த்திக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியிருந்தார்.
சைதாப்பேட்டை 17-வது கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்திக்கை கோர்ட்டில்ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செக் மோசடி தொடர்பாக நடிகை ரோஜா படாத பட்டு வருகிறார். தேனிலவுக்குப் போயும் அவரை கோர்ட் சம்மன்விடாமல் துரத்துகிறது. இப்போது கார்த்திக் மீதும் இதே மாதிரியான புகார் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











