»   »  கமலின் ஹலோவை புரிஞ்சுக்கவே பல ஆண்டுகள் ஆகும், இந்தியன் டிரம்ப்: சு.சாமியை விளாசிய இயக்குனர்

கமலின் ஹலோவை புரிஞ்சுக்கவே பல ஆண்டுகள் ஆகும், இந்தியன் டிரம்ப்: சு.சாமியை விளாசிய இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸனை ட்விட்டரில் வம்புக்கு இழுத்த பொர்க்கி புகழ் சுப்பிரமணியன் சாமிக்கு இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். சாமியை அவர் இந்தியன் டிரம்ப் என விமர்சித்துள்ளார்.

தமிழக அரசியல் சூழல் அசாதாரணமாக ஆனதில் இருந்து உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு இது குறித்து பேட்டியும் அளித்தார்.

பேட்டியில் தான் அரசியலுக்கு வர லாயக்கில்லாதவன் என்று கூறினார் கமல்.

சு.சாமி

தமிழர்களை பொர்க்கி என்று விமர்சித்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கமல் ஹாஸனை முதுகெலும்பில்லாத சுயதம்பட்ட முட்டாள் என்று ட்விட்டரில் திட்டியுள்ளார்.

கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன்

சுப்பிரமணியன் சாமி கமலை திட்டிப் போட்ட ட்வீட்டை பார்த்த துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேன் அருமையான பதில் அளித்துள்ளார்.

கமல்

சாமி தயவு செய்து பாம்பஸ் போன்ற கடினமான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால் கமல் சாரின் ஒரு ஹலோவை புரிந்துகொள்ள உங்களுக்கு பல ஆண்டுகள் ஆகும். இந்தியன் டிரம்ப்! என நரேன் விளாசியுள்ளார்.

அர்த்தம்

அர்த்தம்

கமல் தமிழில் ட்வீட்டினாலும் சரி, ஆங்கிலத்தில் ட்வீட்டினாலும் சரி அதன் அர்த்தம் புரியாமல் பலர் தலையை பிய்த்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் தான் அவரின் ஹலோவின் அர்த்தத்தை புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆகும் என்று கூறியுள்ளார் கார்த்திக் நரேன்.

English summary
Dhruvangal 16 director Karthick naren tweeted that, 'Swamy39 pls don't use complex words like 'pompous' cos a simple 'Hello' from Kamal sir will take years for you to understand.Indian trump'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil