இதுக்கு பதில் சொல்லுங்க சார்.. கெளதம் மேனனுக்கு செக் வைத்த நரேன்!

அப்படியே நரகாசூரன் படத்தின் ரிலீஸ் குறித்தும் கொஞ்சம் சொல்லிடுங்க சார் என இயக்குநர் கார்த்திக் நரேன் கெளதம் மேனனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கெளதம் மேனன் தயாரிப்பில் உருவான படம் நரகாசூரன்.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை போல அந்த படமும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கிறது.

எனை நோக்கி பாயும் தோட்டா, துருவங்கள் பதினாறு படங்கள் குறித்த அப்டேட்டை கெளதம் மேனன் வெளியிட்டுள்ள நிலையில், நரகாசூரன் எப்போ ரிலீசாகும் சொல்லுங்க சார் என கார்த்திக் நரேன், கெளதம் மேனனிடம் கேட்டுள்ளார்.

விடிவு காலம்

விடிவு காலம்

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயவால் ஒருவழியாக இம்மாதம் 29ம் தேதி நீண்ட நாட்களாக ரிலீஸ் பிரச்சனையில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாகும் என்ற அறிவிப்பை நேற்று இரவு கெளதம் மேனன் அறிவித்தார். அதே போல, விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் 60 நாட்களில் முடியும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

நரகாசூரன்

நரகாசூரன்

துருவங்கள் பதினாறு படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் நரேனை அழைத்த கெளதம் மேனன் தனது பேனரில் நரகாசூரன் படத்தை பண்ண அழைத்தார். கார்த்திக் நரேனும் அதற்கு சம்மதம் தெரிவித்து, படத்தை இயக்கினார். ஆனால், கெளதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி பிரச்சனையால், நரகாசூரன் படமும் வெளியாகாமல் கிடப்பில் இருக்கிறது.

இந்த படத்தில், அரவிந்த் சாமி, ஸ்ரேயா உள்ளிட்டோர் லீடு ரோலில் நடித்திருந்தனர். துருவங்கள் பதினாறு படத்தை போலவே இந்த படமும் ஒரு க்ரைம் த்ரில்லர் படம் தான்.

கெளதம் மேனனுக்கு செக்

மிகவும் சந்தோஷமாக தனது பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது அடுத்தடுத்து படங்கள் ரிலீசாகும், கூடுதல் போனஸாக ஜோஷுவா இமை போல் காக்க படமும் அடுத்த ஆண்டு காதலர் தினத்துக்கு வரும் என கெளதம் மேனன் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது, இயக்குநர் கார்த்திக் நரேன், அப்படியே நரகாசூரன் படமும் எப்போது ரிலீசாகும் என்பதை அறிவித்து விடுங்கள் சார் என செக் வைத்துள்ளார். இதற்கு கெளதம் மேனன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நம்பாத

கெளதம் மேனன் ட்வீட்டுக்கு கீழே, கார்த்திக் நரேன் கேட்ட கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில், ஒரு ரசிகர், செக்கச்சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமி சொல்லும் நம்பாத வசன மீமை பதிவிட்டு கலாய்த்துள்ளார். மேலும், பல ரசிகர்களும், கார்த்திக் நரேனுக்கு சப்போர்ட் செய்தே பதிவுகளை இட்டு வருகின்றனர்.

தக்காளி தொக்கா?

நரகாசூரன் படம் குறித்து கார்த்திக் நரேன் கேட்டு விட்டார். கெளதம் மேனன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படமும் என்னாச்சு? அந்த படமும் எப்போது வரும் என கெளதம் மேனன் அப்படியே கூறிவிட்டால் நல்லா இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X