நீண்டநாள் பிரச்சனை தீர்ந்தது… நரகாசூரன் ஓடிடியில் வெளியாகிறது !

சென்னை : கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன் ஆகஸ்ட் 13ந் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவலால் இப்படத்திற்காக பல நாட்களாக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

நடிகர் தனுஷ் தன்னுடைய 43 ஆவது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வருகிறார். தனுஷ் ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்வதற்கு முன்பே இந்த படத்தின், முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அரவிந்த்சாமி, ஸ்ரேயா

அரவிந்த்சாமி, ஸ்ரேயா

துருவங்கள் 16 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய திரைப்படம் நரகாசூரன். இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கௌதம்மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

பிரச்சினை தீர்ந்தது

பிரச்சினை தீர்ந்தது

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இத்திரைப்படம் வெளியாகாமல் உள்ளது. பல முறை இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டும் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பைனான்ஸ் சிக்கல் பிரச்சினை முழுவதுமாக பேசி முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் படம் வெளியாவதில் எந்தவித சிக்கலும் இருக்காது.

Recommended Video

Karthick Subbaraj படங்கள்ல இத Note பண்ணியிருக்கீங்களா? | அப்பா, மனைவி
ஓடிடியில்

ஓடிடியில்

இந்நிலையில் நரகாசூரன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 13ந் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது. இப்படத்திற்காக பல நாட்களாக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X