கார்த்திக் நரேன் மிரட்டிட்டாருப்பா.. ’நவரசா’வில் நச்சுன்னு இருக்கும் #ProjectAgni

சென்னை: நவரசா நெட்பிளிக்ஸில் வெளியாகி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.

9 இயக்குநர்கள் 9 விதமான உணர்ச்சிகள் மிகுந்த கதைக் களத்துடன் உருவாக்கி உள்ள நவரசா ஆந்தாலஜி படத்தை நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி உள்ள பிராஜக்ட் அக்னி குறும்படத்திற்கு மிகுந்த பாராட்டுக்கள் சமூக வலைதளங்களில் கிடைத்து வருகின்றன.

பிராஜக்ட் அக்னி

பிராஜக்ட் அக்னி

நவரசா ஆந்தாலஜியில் இயக்குநர் கார்த்திக் நரேன் பிராஜக்ட் அக்னி எனும் குறும்படத்தை இயக்கி உள்ளார். அரவிந்த் சாமி மற்றும் பிரசன்னா இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த கதை தான் நவரசாவிலேயே நச்சுன்னு இருக்கு என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

கார்த்திக் கம்பேக்

கார்த்திக் கம்பேக்

துருவங்கள் பதினாறு படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசூரன் திரைப்படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நரகாசூரனை அடுத்து அவர் இயக்கிய மாஃபியா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு பிராஜக்ட் அக்னி நல்ல கம்பேக் படமாக அமைந்துள்ளது

சார்பட்டா வசனம்

சார்பட்டா வசனம்

நவரசா ஆந்தாலஜியில் தனது பிராஜக்ட் அக்னி சிறப்பாக வந்துள்ளதை அறிந்த இயக்குநர் கார்த்திக் நரேன், நான் யாருன்னு எல்லாருக்கும் சொல்ற நேரம் வந்துடுச்சுன்னு ஆர்யா சார்பட்டா பரம்பரை படத்தில் பேசும் வசன புகைப்படத்தை ஷேர் செய்து ட்வீட் போட்டு இருந்தார். அதே போல தற்போது அவரது பிராஜக்ட் அக்னி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

தலைவா செஞ்சிட்ட போ

தலைவா செஞ்சிட்ட போ

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நவரசாவில் இடம்பெற்றுள்ள பிராஜக்ட் அக்னி திரைப்படம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக அமைந்துள்ளதாகவும், மைண்ட் பிளோயிங் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், இயக்குநர் கார்த்திக் நரேனின் டைட்டில் கார்ட் ஸ்க்ரீன் ஷார்ட்டை போட்டு தலைவா செஞ்சிட்ட போ என மாஸாக ட்வீட் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

பத்துக்கு பத்து

பத்துக்கு பத்து

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ள பிராஜக்ட் அக்னி திரைப்படம் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலையும் கொடுக்கும் விதமாக உள்ளது. இதனை முழு நீள திரைப்படமாக நிச்சயம் எடுக்க வேண்டும். இந்த கதைக்கு பத்துக்கு பத்து மார்க் என ரசிகர்கள் போட்டு கார்த்திக் நரேனுக்கு கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

ஸ்டன்னிங்

ஸ்டன்னிங்

அன்பான இயக்குநர் கார்த்திக் நரேன் கண்டிப்பாக இந்த படத்தை பெரிய படமாக எடுத்து திரையில் வெளியிடுங்க என ஏகப்பட்ட ரசிகர்கள் பிராஜக்ட் அக்னி ஸ்டன்னிங்கா இருக்கு என கமெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு நிச்சயம் பெரிய மைல் கல்லாக இந்த கதை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பாருங்க

இப்படி பாருங்க

அரவிந்த் சாமியை கார்த்திக் நரேனாகவும், பிரசன்னாவையும் ரசிகனாகவும் மாற்றி பாருங்க இந்த கதை உங்களுக்கு வேறு ஒரு உணர்ச்சியை நிச்சயம் கொடுக்கும் என இந்த நெட்டிசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். மேலும், மற்ற கதைகளை விட இது நல்லா இருக்கு என்றும் கமெண்ட் செய்துள்ளார்.

மாறன்ல மாஸ் காட்டுங்க

மாறன்ல மாஸ் காட்டுங்க

இயக்குநர் கார்த்திக் நரேன் தனுஷின் மாறன் படத்தை இயக்கி வருகிறார். பிராஜக்ட் அக்னி படத்தை பார்த்த ரசிகர்கள் மாறன் படமும் வேற லெவலில் இருக்கும் என்பதை உறுதியாக நம்பி வருகின்றனர். ஆடுகளம் படத்தின் போட்டோவை போட்டு இயக்குநர் கார்த்திக் நரேன் விட்றாதடா தம்பி என போட்ட ட்வீட்டையும் ஷேர் செய்து அவரை பாராட்டி வருகின்றனர்.

30 நிமிஷம்

30 நிமிஷம்

ஸ்டன்னர் கார்த்திக் நரேன்.. 30 நிமிஷத்தில் ஒரு நிமிஷத்தை கூட வீணாக்காமல் வாட்டர் டைட்டாக இந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் டிராமாவை இயக்கி உள்ளார். அவுட் ஆஃப் தி பார்க்காக இந்த கதை நவரசாவில் இருக்கிறது என்றும் நிச்சயம் இது கார்த்திக் நரேனுக்கு மகுடத்தை சூட்டும் என்றும் பாராட்டி உள்ளார்.

Recommended Video

அந்த இரண்டு நடிகர்கள் - Vera Level | Director Vasanth | Navarasa | Filmibeat Tamil
கெத்துக் காட்டிய கார்த்தி

கெத்துக் காட்டிய கார்த்தி

மாஸ்டர் விஜய் போல களமிறங்கி கெத்துக் காட்டிட்டாரு கார்த்திக் நரேன் என தனுஷ் ரசிகர்கள் பிராஜக்ட் அக்னி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். அடுத்ததாக தனுஷின் மாறன் திரைப்படமும் இதே அளவுக்கு இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் ஏற்பட்டுள்ளதை இயக்குநர் கார்த்திக் நரேன் பூர்த்தி செய்வார் என்று நம்புவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X