»   »  ஆனானப்பட்ட சு. சாமியையே துருவங்கள் 16 இயக்குனர் இப்படி காமெடி பீஸாக்கிட்டாரே!

ஆனானப்பட்ட சு. சாமியையே துருவங்கள் 16 இயக்குனர் இப்படி காமெடி பீஸாக்கிட்டாரே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமியால் கவுண்டமணிக்கு கடும் போட்டி என கலாய்த்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

துருவங்கள் 16 படம் மூலம் இயக்குனர் ஆனவர் கார்த்திக் நரேன். முதல் படத்திலேயே யாருப்பா இந்த பையன் என்று ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை பேச வைத்துள்ளார்.

இந்நிலையில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமியை அவர் கலாய்த்துள்ளார்.

சு. சாமி

உலக நாயகன் கமல் ஹாஸனை சுயதம்பட்ட முட்டாள் என்று விமர்சித்த சுப்பிரமணியன் சாமி தான் இந்திய அரசு வெர்ஷனின் கலக்கப் போவது யாரு வெற்றியாளர். கவுண்டமணி சாருக்கு கடும் போட்டி என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நரேன்.

இந்தியன் டிரம்ப்

இந்தியன் டிரம்ப்

சு. சாமி கமலை முட்டாள் என்று கூறியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கார்த்திக் நரேன் அவரை இந்தியன் டிரம்ப் என ட்விட்டரில் விமர்சித்திருந்தார்.

ட்விட்டர்

ட்விட்டர்

தன்னை இந்தியன் டிரம்ப் என்று விமர்சித்த கார்த்திக் நரேனை சு.சாமி ட்விட்டரில் பிளாக் செய்துவிட்டார். இதற்கிடையே நரேன் சாமிக்கு செம பதிலடி கொடுத்தீர்கள் என நெட்டிசன்கள் அவரை பாராட்டினர்.

உலக நாயகன்

நரேனின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த கமல் ரசிகர் ஒருவர் போட்டுள்ள கமெண்ட், அண்ணா எங்கள் கமல் ஹாஸன் ஒரு உலக நாயகன், சுப்பிரமணியன் சாமி உளறல் நாயகன். அது என்ன மாயமோ மந்திரமோ எவ்ளோ திட்டினாலும் இந்த சு. சாமிக்கு ரோஷமே வர மாட்டேங்கிது என்று கூறியுள்ளார்.

English summary
Director Karthick Naren post in Facebook says, 'Ladies & gentlemen, introducing subramanian swamy. The official title winner of 'kalakapovadhu yaaru - Indian government version'. Tough competition for goundamani sir!'
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil