மீண்டும் இணைகிறதா கார்த்திக் சுப்புராஜ் - விஜய் சேதுபதி கூட்டணி!?
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஜூன் 18ம் தேதி வெளிவரவுள்ள படம் ஜகமே தந்திரம்.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படம் ஜூன் 18ம் தேதி நேரடியாக Netflix ல் வெளிவரவுள்ளது.

நல்ல வரவேற்பு
ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ஆக்ஷன் காட்சிகள், வசனங்கள் ரசிகர்களை ஈர்த்த நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

விக்ரம், துருவ்
இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் சியான் விக்ரமின் 60வது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் விக்ரம், அவரின் மகன் துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
Recommended Video

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இதன் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து மீண்டும் படம் இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

பரவும் தகவல்
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் விஜய் சேதுபதி உடன் மற்றொரு படம் பணியாற்றவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்தை Stone Bench Productions தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜின் பீட்சா & இறைவி படத்தில் முன்னிலையிலும், ஜிகர்தண்டா & பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











