Suriya 44 Tittle: தலைவர் ரெஃபரன்ஸ்.. சூர்யா 44 படத்தின் டைட்டில் இதுதானா? செம குஷியில் ரசிகர்கள்..
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா படம் பெரும் சொதப்பலாக, படக்குழுவினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார்கள். குறிப்பாக படத்தின் ப்ரோமோசனின் போது சூர்யா, படத்தினை, கங்கு போல ஒரு படம் வந்துட்டு இருக்கு எனக் கூறினார். அதேபோல் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, படத்தின் வெற்றி விழா மிகவும் பிரமாண்டமாக நடத்தப்படும் எனக் கூறினார். ஆனால் படம் பெரும் தோல்விப்படமாக மாறியதால், படக்குழுவினர் கப்சிப் மோடுக்குச் சென்றுவிட்டார்கள். இப்படியான நிலையில் சூர்யாவின் 45வது படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.
கங்குவா சூர்யாவின் 43வது படம். கங்குவா படத்தின் ப்ரோமோசன் பணிகள் முடிவதற்கு முன்னதாகவே, சூர்யாவின் 44வது படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இந்தப் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இப்படியான நிலையில் படத்தினை அடுத்த ஆண்டு மார்ச் அல்லது பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேநேரத்தில் படத்தின் டைட்டில் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. படத்தின் டைட்டில் டீசர் நாளை அதாவது கிருஸ்துமஸ் தினத்தினை முன்னிட்டு வெளியாக உள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இப்படியான நிலையில் படத்தின் டைட்டில் இதுதான் எனவும், அதற்கு இதுதான் காரணம் என்றும், இணையத்திலும் சினிமா வட்டாரத்திலும் பேச்சுகள் தீவிரமாக அடிபட்டு வருகின்றது.
கார்த்திக் சுப்புராஜ்: கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக மாறி நிற்கின்றார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள கேம் சேஞ்சர் படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜ் எழுதியது. இவரது இயக்கத்தில் சூர்யா நடித்த படம்தான், சூர்யா 44. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகின்ற நிலையில் படத்தின், அடுத்த கட்ட அப்டேட் குறித்து எந்தத் தகவலும் வெளிவராமல் இருந்தது. குறிப்பாக படத்தின் டைட்டில் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
டைட்டில்: ஆனால், திரைத்துறை வட்டாரத்தில் படத்தின் டைட்டில் குறித்து ஒரு பேச்சு ஓடிக்கொண்டு இருந்தது. அதாவது, படத்திற்கு 'கல்ட்’ எனப் பெயர் வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் அந்தப் பெயரை ஏற்கனவே நடிகர் அதர்வா, தான் இயக்கவுள்ள படத்திற்காக பதிவு செய்து வைத்துள்ளார் என்றும், அவரிடம் டைட்டில் தொடர்பாக அணுகியபோது, தர மறுத்துவிட்டார் எனவும் பேச்சுகள் அடிப்பட்டது.
ரஜினிகாந்த்: இந்நிலையில் படத்தின் டைட்டில் நாளை வெளிவரவுள்ள நிலையில்,படத்திற்கு 'ஜானி' எனப் பெயர் வைத்துள்ளதாக ஒரு பேச்சு சினிமா வட்டாரத்தில் அடிபடுகின்றது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெறித்தனமான ரஜினிகாந்த் ரசிகர். எனவே, கல்ட் டைட்டில் கிடைக்காததால், சூப்பர் ஸ்டார் நடித்து எவர் க்ரீன் படமாக இருக்கக்கூடிய, ஜானி படத்தின் டைட்டிலை வைக்க முடிவெடுத்துள்ளதாக ஒரு பேச்சு திரைத்துறையில் அடிபடுகின்றது. மேலும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜானி படத்தில் வைத்திருந்ததைப்போல், தாடியும் மீசையும் சூர்யா வைத்துள்ளார் என்பதே இந்தப் பெயரைத் தேர்வு செய்ய ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











