ரஜினிக்கு மனைவியாக சிம்ரன், மகனாக பாபி சிம்ஹா... மகளுக்காக தொடரும் தேடுதல் வேட்டை!

புதிய படத்தில் ரஜினியின் மகள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகையை படக்குழு தேடி வருகின்றனர்.

Recommended Video

ரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் - சிம்ரன்!- வீடியோ

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் மகள் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை படக்குழுவினர் தீவிரமாக தேடி வருகிறார்களாம்.

ரஜினியின் நடிப்பில் ஷங்கரின் 2.0, பா.ரஞ்சித்தின் காலா என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதையடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

வில்லனாக விஜய் சேதுபதி:

வில்லனாக விஜய் சேதுபதி:

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரஜினியின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கதைப்படி ரஜினிக்கு மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

பாபி சிம்ஹா:

பாபி சிம்ஹா:

அதன்படி, ரஜினிக்கு ஜோடியாக சிம்ரனும், மகன்களாக பாபி சிம்ஹா மற்றும் ஜில் ஜங்,ஜக், மெர்க்குரி படங்களில் நடித்த சனந்த் ரெட்டி ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேடுதல் வேட்டை:

தேடுதல் வேட்டை:

இந்நிலையில், ரஜினியின் மகள் கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை படக்குழுவினர் வலைவீசி தேடி வருகின்றனராம். கபாலியில் ரஜினியின் மகளாக நடித்த தன்ஷிகாவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது போல, இப்படத்திலும் இந்த கதாபாத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கு ஏற்ற திறமையான நடிகையை தேடி வருகிறார்களாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

இப்படத்தின் முதற்கட்ட தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரஜினியுடன் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X