கார்த்திக் சுப்புராஜின் பிறந்தநாள் கொண்டாட்டம் .. சர்ப்ரைஸ் கொடுத்த பிரம்மாண்ட இயக்குனர்

சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேற்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார்.

குறும்படங்கள் இயக்க தொடங்கி, பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் கார்த்திக் சுப்புராஜ்.

நேற்று #Chiyaan60 படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

வெற்றி படங்கள்

வெற்றி படங்கள்


நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் சினிமா துறையில் தடம் பதித்த கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஜிகர்தண்டா, இறைவி என தொடர்ந்து தரமான வெற்றி படங்களை கொடுத்தார் கார்த்திக் சுப்பராஜ்.

பேட்ட பராக்

பேட்ட பராக்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ், ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். 2019ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான பேட்ட திரைப்படம் பெரிய வெற்றி பெற்று ரசிகர்களை கவர்ந்தது. கார்த்திக் சுப்புராஜை வேற ஒரு லெவலுக்கு கொண்டு சென்றது பேட்ட திரைப்படம்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

அதை தொடர்ந்து தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜகமே தந்திரம் ரிலீசுக்கு காத்துள்ள நிலையில் விக்ரம், துருவ் விக்ரம் ஆகியோரை வைத்து #Chiyaan60 படத்தை இயக்க தொடங்கியுள்ளார். இந்த இரண்டு படங்களின் மீதும் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

இதையடுத்து நேற்று தனது பிறந்தநாளை #Chiyaan60 படக்குழுவுடன் கொண்டாடியுள்ளார். #Chiyaan60 படக்குழுவினருக்கும், பிறந்தாள் கொண்டாட்டத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்கும், வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கும் நன்றி கூறி ட்வீட் பதிவிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X