தீபாவளிக்கு நான் லேட்டு இருந்தாலும் திரையரங்குகளில் தீபாவளி கொண்டாடபட்டது
Recommended Video
சென்னை:கைதி படம் தீபாவளிக்கு வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பலரிடத்தில் பாராட்டை பெற்றார் .லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் மாநகரம் படத்தை இயக்கி இருந்தார்.அந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது .அறிமுகமற்ற மனிதர்களுக்குள்ளான சந்திப்பு அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனை அதை அவர்கள் எப்படி தீர்த்தார்கள் என்று படத்தை நேர்மறையான திரைக்கதையில் உருவாக்கி இருப்பார் லோகேஷ் கனகராஜ்.
தற்போது கைதி படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்,விஜய் சேதுபதி, சாந்தனு ,மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் போன்ற பல முக்கியமான நடிகர்கள் படத்தில் நடித்து வருகின்றனர் .படம் இதுவரை வந்த விஜய் படங்களில் இருந்து கட்டாயம் வேறுபட்டிருக்கும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சமீபத்தில் கொடுத்த நேர்காணல்களில் கூறியிருந்தார்.
மேலும் படத்தின் மூன்றாம் ஷெடியூல் டெல்லியில் நடைப்பெற்று வருகிறது.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தை பார்த்து விட்டு படத்தை பற்றியும் பட இயக்குனர் லோகேஷ் பற்றியும் ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார் .படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது,ஆச்சரிய பட வைக்கும் காட்சிகள் நிறைய இருந்தன ,நான் தீபாவளிக்கு வந்த படத்தை தாமதமாக பார்த்துள்ளேன் ,ஆனால் படம் தீபாவளி கொண்டாடியது போல் இருந்தது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறினார் .

கடைசியாக ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ் ,அந்த படத்திற்கு பிறகு தற்போது தனுசை வைத்து டி40 என்ற முழுமையான தலைப்பிடாத படத்தை இயக்கி வருகிறார் ,இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நிறைவேறியுள்ளது . இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











