இந்தியில் ரீமேக் ஆகிறது...தெலுங்கில் மெகா ஹிட்டான அல்லு அர்ஜுன் படம்.. இவர்தான் ஹீரோ!

By

சென்னை: தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லோ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஹீரோ முடிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Udhay Raj 17 வருஷத்துக்கு பிறகு மாஸ்டரில் |Thalapathy Vijay | Master

அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன, தெலுங்கு படம், 'அலா வைகுந்தபுரம்லோ'.

பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி, முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத், நவ்தீப் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஹவுஸ்புல் காட்சி

ஹவுஸ்புல் காட்சி

த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் ஊரடங்குக்கு முன்பு வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. தெலுங்கு சினிமாவில் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்ட்டில் இந்தப் படம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்கிறார்கள். இது பல படங்களின் சாதனைகளை உடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. பழைய கதையை கொண்ட படம் என்றாலும் திரைக்கதை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

100 மில்லியன்

100 மில்லியன்

தமன் இசை அமைத்துள்ளார். இதன் பாடல்கள் மாஸ் ஹிட்டாகி இருந்த நிலையில், புட்ட பொம்மா என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. இந்த பாடல் யூடியூப்பில் 101 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது. தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல், இந்தி, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்ததால் பாடல் சாதனை படைத்ததாகக் கூறப்பட்டது.

இந்தி ரீமேக்

இந்தி ரீமேக்

இந்தப் படத்தை அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்திருந்தார். இதன் ரீமேக் உரிமையை வாங்க போட்டி நிலவியது. இதன் தமிழ் ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியில் கார்த்தி ஆர்யன் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர், பியார் கா பஞ்சனமா, ஆகாஷ்வானி, கெஸ்ட் இன் லண்டன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

ரோகித் தாவன்

ரோகித் தாவன்

இப்போது பூல் புலைய்யா, தோஸ்தானா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கார்த்திக் ஆர்யன். இதை முடித்தபின் இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த ரீமேக்கை ரோகித் தாவன் இயக்குகிறார். இவர் பிரபல ஹீரோ வருண் தாவனின் சகோதரர். இவர் ஏற்கனவே தேஸி பாய்ஸ், டிஷ்யூம் படங்களை இயக்கியவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X