கார்த்திக் டயல் செய்த எண்.. நயன்தாரா & சிம்பு பழைய காதலா? இந்த விஷயத்த கவனிச்சீங்களா!

சென்னை: கவுதம் மேனின் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் நயன்தாரா மற்றும் சிம்புவின் காதல் சம்பந்தப்பட்டது என ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

Recommended Video

GVM SHORTFILM |வச்சு செய்த நெட்டிசன்கள்| அன்று லஷ்மி இன்று கார்த்திக் டயல் செய்த எண்|Filmibeat Tamil

கவுதம் மேனன் இயக்கத்தில் அண்மையில் வெளியான குறும்படம் கார்த்திக் டயல் செய்த எண். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இந்த குறும்படம் உள்ளது.

இதில் நடிகர் சிம்பு மற்றும் திரிஷா ஆகியோர் நடித்தனர். திருமணமான தனது காதலியிடம் சிம்பு, போனில் தொடர்பு கொண்டு நீ வேணும் என பேசும் வகையில் ஃபுல் லவ் ஃபீலிங்கில் உள்ளது இப்படம்.

சிம்பு - நயன் காதல்

சிம்பு - நயன் காதல்

அடுத்தவர் மனைவியிடம் எப்படி நீ வேண்டும் என கூறலாம் என சமூக வலைதளங்களில் அந்தப் படத்தை வறுத்தெடுத்தனர் நெட்டிசன்கள். சமூக வலைதளங்களில் வகை வகையான மீம்ஸ்கள் என போட்டு வச்சு செய்தனர். இந்நிலையில் இப்படம் சிம்பு - நயன்தாராவின் காதல் கதை என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக்காக சிம்பு..

கார்த்திக்காக சிம்பு..

இந்தப் குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஜெஸ்ஸி மற்றும் கார்த்திக் குறித்தது என்றாலும் நயன்தாரா பற்றிய ஒரு மறைமுக குறிப்பும் உள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு கார்த்திக் கதாப்பாத்திரத்தில் இயக்குநராக நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

மறைமுகமாக நயன்

மறைமுகமாக நயன்

இந்நிலையில் இந்த குறும்படம் லாக்டவுன் நேரத்தில் டல்லாக உள்ள கார்த்திக்கை உற்சாகப்படுத்தும் வகையிலும், அடுத்தப் படத்திற்கான ஸ்கிரிப்டை தயார் செய்ய சொல்லி ஊக்கப்படுத்துவதாகவும் உள்ளது. இதன் க்ளைமேக்ஸ் காட்சியில்தான் நயன்தாராவை மறைமுகமாக பயன்படுத்தியிருக்கின்றனர்.

கமல் & காதம்பரி

கமல் & காதம்பரி

அதாவது ஜெஸ்ஸி பேசிய பிறகு ரிலாக்ஸாக கதை எழுத் ஆரம்பிக்கிறார் கார்த்திக். கதையின் தலைப்பில் கமல் &காதம்பரி - ஒரு காதல் கதை என குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்தப் படம் நானும் ரவுடிதான்.

நயன் பெயர் காதம்பரி

நயன் பெயர் காதம்பரி

இந்தப் படத்தில் நயன்தாராவின் பெயர் காதம்பரி. சில ஆண்டுகளுக்கு முன்பு நயன்தாராவும் சிம்புவும் உயிருக்கு உயிராக காதலித்தனர். பின்னர் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் பிரபு தேவாவுடன் ஏற்பட்ட காதலும் தோல்வியில் முடிய தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா.

அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா

இதே போல் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவின் பெயர் ரஜினிகாந்த். இந்நிலையில் இதில் ஒரு உச்ச நடிகரின் பெயரை குறிப்பிடும் வகையில் கமல் என குறிப்பிடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல்தான் இணையத்தை சூடாக்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X