அனேகனில் தனுஷுக்கு வில்லனாக கார்த்திக்!
தனுஷை வைத்து கேவி ஆனந்த் இயக்கும் புதிய படமான அனேகனில், வில்லனாக நடிக்கிறார் பழைய நடிகர் கார்த்திக்.
'மாற்றான்' படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் 'அனேகன்'. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமாகிறார் அமிரா தஸ்தூர்.

அனேகன்
‘அனேகன்' என்றால் உருவத்தில் ஒன்றானவன், வீரத்தில் பலமானவன் என்று பொருளாம். அதற்கேற்றார்போல் இப்படத்தில் தனுஷ் சென்னையில் வாழும் சேரி பையனாகவும், சுருட்டை முடியுடனும், கராத்தே வீரராகவும், ஸ்டைலிஷ் தோற்றத்துடனும் வருகிறாராம்.

கார்த்தி
இந்த படத்தின் வலுவான வில்லன் பாத்திரத்துக்கு நடிகர் கார்த்திக்கை ஒப்பந்தம் செய்துள்ளனர். தனுஷுக்கு இணையான வித்தியாச வேடம் இவருக்கு தரப்பட்டுள்ளதாம்.

ஏஜிஎஸ்
இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ‘மாற்றான்' படம் சரியாகப் போகாவிட்டாலும், தொடர்ந்து கே.வி.ஆனந்துடன் மீண்டும் இந்நிறுவனம் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ் ஜெயராஜ்
இந்தப் படத்துக்கு வழக்கம் போல ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.


Click it and Unblock the Notifications











