5 நாளா வச்சு செஞ்சாங்க.. இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா சிரிக்கிறேன்.. கார்த்திக் குமார் போஸ்ட்!

சென்னை: பாடகி சுசித்ரா மீண்டும் பழைய விஷயங்களை கிளறி பேட்டி கொடுத்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக ஏகப்பட்ட வெறுப்புணர்வுகளை சந்தித்து வந்ததாக சுசித்ராவின் முன்னாள் கணவரான கார்த்திக் குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி ஏகப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுகிறேன் என்கிற பெயரில் அவர் மீது பல அவதூறுகளை அடுக்கினார். சுசித்ராவின் பேச்சுக்கு நேரடியாக பதிலடி கொடுக்காமல் கார்த்திக் குமார் தொடர்ந்து வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் போட்டு வருகிறார்.

Karthik Kumar says after 5 days now i am get some relief after Suchitra s controversy

கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் அவர் ஒரு இம்போடன்ட் என்றும் நடிகர் தனுஷுடன் அந்தரங்க உறவில் இருந்தார் என்றும் தனது தங்கையையும் அவர் விடவில்லை என்றும் பகீர் கிளப்பினார்.

சுசித்ராவின் பகீர் பேட்டி: தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் இருவரது கேங் தான் சுச்சி லீக்ஸ் வெளியாக காரணம் என சுசித்ரா ஏற்கனவே வழக்கு தொடுத்த நிலையில், அதுதொடர்பாக பல ஆண்டுகள் கழித்து மீண்டும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்பை விட இந்தமுறை அனைத்து ரசிகர்களும் அறியும் விதமாக பல்வேறு பிரபலங்கள் குறித்து சுசித்ரா ஏகப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்தி இருப்பது பெரும் பரப்பரப்பை கடந்த ஒரு வாரமாக கிளப்பியது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்: சுச்சி லீக்ஸ் விவகாரம் கடந்த 2017 ஆம் ஆண்டு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாடகி சுசித்ராவுக்கு மனநல பாதிப்பு எனக் கூறி அந்த பிரச்சனையை கார்த்திக் குமார் முடித்து வைத்தார். ஆனால், தொடர்ந்து அவருக்கும் சுசித்ராவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

ஐந்து நாட்கள் மனக்கஷ்டம்: அலைபாயுதே படத்தில் அமெரிக்க மாப்பிள்ளையாக அறிமுகமான கார்த்திக் குமார் தனுஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் கடந்த ஐந்து நாட்களாக பல்வேறு தரப்பிலிருந்து அதிக அளவிலான வெறுப்பை சம்பாதித்து விட்டேன் என்றும் கஷ்டமான சூழலிலும் எனக்காக ஆறுதல் சொல்லி ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

ஜோக் சொல்லி சிரிக்கிறேன்: ஸ்டாண்டப் காமெடியனாக வெளிநாடுகளில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வரும் கார்த்திக் குமார் கடந்த ஒரு வாரமாக மனதளவில் கஷ்டப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டதாகவும் ஜோக் மெசேஜ்களை நண்பர்களுக்கு அனுப்பி கொஞ்சம் கொஞ்சமாக சிரிக்க தொடங்கி விட்டேன் என்றும் கூறியுள்ளார். அவருடைய ஃபாலோயர்கள் கார்த்திக் குமாரை பற்றி தெரியும் என்றும் அவர் தங்கமான மனிதர் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Karthik Kumar says after 5 days now i am get some relief after Suchitra s controversy

புகார் அளித்துள்ளேன்: பட்டியலின மக்களை இழிவுப்படுத்தும் விதமாக கார்த்திக் குமார் சுசித்ராவை திட்டும் போது பேசி விட்டார் என பஞ்சாயத்து வெடித்தது அவரை ரொம்பவே பாதிப்படைய செய்து விட்டது என்றும் அந்த வாய்ஸ் யாருடைய வாய்ஸ் என்பதை தெரிந்து கொள்ள புகார் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார். பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் கார்த்திக் குமார் பேசியதாக அந்த ஆடியோவை பயில்வான் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X