சுசித்ரா விவகாரம்.. கார்த்திக் குமார் 2வது மனைவி அம்ருதா ஸ்ரீனிவாசன் போஸ்ட்டை பார்த்தீங்களா?
சென்னை: நடிகரும் ஸ்டாண்டப் காமெடியனான கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர்கள் என அவரது முன்னாள் மனைவி சுசித்ரா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும், பயில்வான் ரங்கநாதன் கார்த்திக் குமார் பேசியதாக வெளியிட்ட ஆடியோவில் பட்டியலின சமூக மக்களை தாக்கும் விதமாக அவர் பேசி்யதாக வெளியான ஆடியோவுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்த நிலையில், அந்த குரல் தனது குரல் இல்லை என கார்த்திக் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கார்த்திக் குமார் சினிமாவிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்து ஸ்டாண்டப் காமெடியனாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சிகளிலேயே மற்ற பிரிவு மக்கள் குறித்து அவர் இழிவாக காமெடி என்கிற பெயரில் பேசியதாக அந்த வீடியோக்களை ஷேர் செய்து கார்த்திக் குமார் நிச்சயமாக அப்படி தப்பாக பேசியிருப்பார் என நெட்டிசன்கள் அவருக்கு எதிரான போஸ்ட்களை போட்டு வருகின்றனர்.

யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுடன் கார்த்திக் குமார் நடித்த நிலையில், தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் இருவரும் தனி அறையில் என்னவெல்லாம் செய்தார்கள் தெரியுமா? என சுசித்ரா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கார்த்திக் குமாருக்கு ஆதரவாக அவரது இரண்டாவது மனைவி அம்ருதா ஸ்ரீனிவாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு போஸ்ட்டை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கார்த்திக் குமார்: மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக் குமார். வானம் வசப்படும், கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி, பொய் சொல்ல போறோம், நினைத்தாலே இனிக்கும், கொலை கொலையா முந்திரிக்கா, தெய்வத்திருமகள், வெப்பம், பசங்க 2, வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், டிக்கெட், மன்னர் வகையறா, ராக்கெட்ரி மற்றும் அன்னபூரணி உள்ளிட்ட பல படங்களில் கார்த்திக் குமார் நடித்துள்ளார்.

சுசித்ரா உடன் விவாகரத்து: 2017ம் ஆண்டு சுச்சி லீக்ஸ் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை என அவருக்கு ஆதரவாக சப்போர்ட் செய்து வந்த கார்த்திக்குமார் அந்த பிரச்சனை முடிந்த பின்னர், சுசித்ராவுடன் ஏற்பட்ட சண்டைக்காக அவரைப் பிரிந்து விவாகரத்து செய்தார். சுசித்ரா விவாகரத்துக்குப் பிறகு சினிமாவில் பல நண்பர்களை இழந்து தனி மரமாக இருந்ததாகவும் விஜய் மற்றும் அஜித் குமார் கூட தன்னை நட்பு வட்டத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இரண்டாவது திருமணம்: கடந்த 2021 ஆம் ஆண்டு அம்ருதா ஸ்ரீனிவாசன் எனும் நடிகையை கார்த்திக் குமார் திருமணம் செய்து கொண்டார். தன்னைவிட 16 வயது இளம்பெண்ணை கார்த்திக் குமார் திருமணம் செய்தது அப்போது பேசு பொருளாக மாறியது. 2014 ஆம் ஆண்டுக்கான குறை ஒன்றும் இல்லை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அம்ருதா ஸ்ரீனிவாசன். அவியல், மேயாத மான், தேவ், இறுதிப் பக்கம், போர் மற்றும் பொன் ஒன்று கண்டேன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

கணவருக்கு ஆதரவாக: சுசித்ரா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தனது கணவர் கார்த்திக் குமாருக்கு ஆதரவாக தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வார்த்தையுடன் அம்ருதா ஸ்ரீனிவாசன் போஸ்ட் ஒன்றை போட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். வாழ்க்கை என்பது சிறியது. இதில், தேவையில்லாமல் விவாதம் செய்யாமல் டேஷா போச்சுன்னு நகர்ந்து வந்துடு கார்த்திக் குமார் என கேப்ஷன் கொடுத்துள்ளார் அம்ருதா ஸ்ரீனிவாசன்.



Click it and Unblock the Notifications











