யாரடி நீ மோகினி கார்த்திக்கை ஞாபகமிருக்கா? அவருடைய 2வது மனைவி வவ்வால் போல எப்படி தொங்குறாரு பாருங்க!

சென்னை: யாரடி நீ மோகினி, பொய் சொல்லப் போறோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் கார்த்திக் குமாரின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான அம்ருதாஸ்ரீனி வவ்வால் போல மரத்தில் தொங்கும் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

பாடகி சுசித்ராவை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் கார்த்திக் குமார் சுச்சி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு அவரை கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து விவாகரத்து செய்து விட்டார்.

அதன் பின்னர் நடிகை அம்ருதாஸ்ரீனியை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வரும் கார்த்திக் குமார் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது பயணத்தை மாற்றிக் கொண்டார்.

Karthik Kumar wife Amrutha Srini enjoys her forest life

யாரடி நீ மோகினி சீனு: மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நயன்தாரா, ரகுவரன், கருணாஸ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தில் கார்த்திக் குமார் சீனு என்கிற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருப்பார்.

தனது உயிர் தோழன் விரும்பிய பெண்ணைத் தான் கட்டிக்கப் போகிறோம் என்பதை அறிந்ததும் சீனு தனது நண்பனுக்காக தனது முறைப் பெண்ணை விட்டுக் கொடுக்கும் கதையாக யாரடி நீ மோகினி திரைப்படம் அமைந்திருக்கும்.

Karthik Kumar wife Amrutha Srini enjoys her forest life

வித்தியாசமான நடிகர்: அந்த படத்தில் பட்டென கோவணத்துடன் குளிக்கும் காட்சியில் இயல்பாக நடித்திருப்பார் கார்த்திக் குமார். மாதவனின் அலைபாயுதே படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர், கண்ட நாள் முதல், நினைத்தாலே இனிக்கும், தெய்வத்திருமகள், வெப்பம், பசங்க 2 மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சுச்சி லீக்ஸ் விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் இருந்தே விலக முடிவெடுத்த கார்த்திக் குமார் வெளிநாடுகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வலம் வருகிறார். கடைசியாக மாதவனின் அழைப்பை மறுக்க முடியாமல் ராக்கெட்ரி படத்தில் நடித்திருந்தார்.

Karthik Kumar wife Amrutha Srini enjoys her forest life

இரண்டாவது மனைவி: குறை ஒன்றுமில்லை, அவியல், மேயாத மான், தேவ், இறுதிப்பக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை அம்ருதாஸ்ரீனியை கார்த்திக் குமார் 2021ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

லிவின், கள்ளச்சிரிப்பு, ஆனந்தம் உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் நடித்து வரும் அம்ருதாஸ்ரீனி தற்போது தனது நண்பர்களுடன் காட்டுக்கு டிரெக்கிங் சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Karthik Kumar wife Amrutha Srini enjoys her forest life

மரத்தில் தொங்கியபடி: நாய்க்குட்டிகளை கொஞ்சியும், காட்டில் தனியாக சுற்றித் திரியும் போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ள அம்ருதாஸ்ரீனி மரத்தில் வவ்வால் போல தலை கீழாக தொங்கியபடி எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் வாவ் என்றும் செம தில்லுங்க உங்களுக்கு என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் தனது கணவரை மிஸ் செய்கிறேன் என பதிவிட்டு இருந்த அம்ருதா தற்போது தனது சுற்றுலாவை நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு கொண்டாடி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X