Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நிறங்கள் மூன்று படத்தில் ரகுமான் கதாபாத்திரத்தின் பெயரை வெளிப்படுத்திய கார்த்திக் நரேன்!
சென்னை: தமிழ் சினிமாவில் திறமைமிக்க இளம் இயக்குனராக கலக்கிக் கொண்டுள்ளவர் இயக்குனர் கார்த்திக் நரேன்
துருவங்கள் பதினாறு மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து நரகாசூரன்,மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கினார் இப்பொழுது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் மாறன் என்ற படத்தை இயக்கியுள்ளார்
அதர்வா ஹீரோவாக நடிக்கும் நிறங்கள் மூன்று படத்தை இயக்கி வரும் கார்த்திக் நரேன் இந்த படத்தில் ரகுமான் கதாபாத்திரத்தின் பெயரை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
வேறமாறி
ஆஃபர்..
மளிகை
பொருட்கள்
வாங்கினால்
வலிமை
டிக்கெட்
இலவசம்..
எங்கே
தெரியுமா?

ரகுமான் முதன்மை கதாபாத்திரத்தில்
மலையாள படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு தமிழில் மிகச் சிறந்த திரில்லர் திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறு என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது வெற்றிகரமான இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். துருவங்கள் பதினாறு படத்தில் ரகுமான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார் எதிர்பார்க்காத ட்விஸ்ட்கள் விறுவிறுப்பான திரைக்கதை என மிகச் சிறந்த படத்தைக் கொடுத்த கார்த்திக் நரேன் இப்போது தமிழில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.

திரில்லர் கதையில்
துருவங்கள் பதினாறு கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் தயாரிப்பில் நரகாசூரன் என்ற படத்தை இயக்கியிருந்தார். சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படமும் திரில்லர் கதை களத்தில் எடுக்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்தும் இப்படம் இன்று வரை ரிலீஸாக முடியாமல் பல்வேறு பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டுள்ளது

தனுஷ் பத்திரிக்கையாளராக
> தடைகளை தாண்டி இப்போது தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண்விஜய், பிரசன்னா இணைந்து கலக்கிய மாஃபியா என்ற சிறந்த கேங்ஸ்டர் திரைப்படத்தைக் கொடுத்த கார்த்திக் நரேன் இப்பொழுது தனுஷ் உடன் கூட்டணி அமைத்து மாறன் என்ற படத்தை இயக்கி வருகிறார். அசுரன்,கர்ணன் என ராவான கதைகளில் நடித்து வந்த தனுஷ் இப்பொழுது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் திரைப்படத்தில் முற்றிலும் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் இதில் பத்திரிகையாளர்களாக நடித்துள்ளனர்.

ரகுமான் கதாபாத்திரத்தின் பெயர்
மாறன் படப்பிடிப்பு முடிந்து மிக விரைவிலேயே நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கார்த்திக் நரேன் அடுத்ததாக நிறங்கள் மூன்று என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். அதர்வா ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில் ரகுமான், சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் . துருவங்கள் பதினாறு படத்திற்குப் பிறகு மீண்டும் கார்த்திக் நரேன், ரகுமான் கூட்டணி இந்த படத்தில் இணைகிறது. நிறங்கள் மூன்று படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வரும் நிலையில் படத்தில் ரகுமான் கதாபாத்திரத்தின் பெயர் "வசந்த்" என்பதை படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கார்த்திக் நரேன் வெளிப்படுத்தியுள்ளார்.