நிறங்கள் மூன்று படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த கார்த்திக் நரேன்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் ரிலீசுக்கு தயாராக உள்ளது

மாறன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார்

நிறங்கள் மூன்று என டைட்டில் வைக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது பகிர்ந்துள்ளார்.

திரில்லர் கதைகளை கையாளும் வித்தை

திரில்லர் கதைகளை கையாளும் வித்தை

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக கலக்கி கொண்டுள்ளவர் இயக்குனர் கார்த்திக் நரேன். முதல் படைப்பிலேயே அனைவரையும் வியக்க வைத்த இவர் துருவங்கள் பதினாறு மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இளம் வயதிலேயே திரில்லர் கதைகளை கையாளும் வித்தைகளை கற்ற கார்த்திக் நரேனுக்கு துருவங்கள் பதினாறு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.

ஓடிடியில் வெளியாகிறது

ஓடிடியில் வெளியாகிறது

அதைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் நரகாசூரன் என்ற படத்தை இயக்கினார். சந்தீப் கிஷன்,ஸ்ரேயா சரண், ஆத்மிகா, இந்திரஜித் சுகுமரன் என பலர் நடித்திருந்த இப்படம் அனைத்து பணிகளும் முடிந்தும் பணப் பிரச்சினை காரணமாக ரிலீசாகாமல் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவலும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது

தனுஷ் பத்திரிகையாளராக

தனுஷ் பத்திரிகையாளராக

அசுரன் கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படமும் சர்வதேச அளவில் விருதுகளை வென்றது. தொடர்ந்து ராவான கதைகளில் நடித்து வந்த தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் செம ஸ்டைலிஷான கதையில் பத்திரிக்கையாளராக நடித்து வருகிறார். இப்படத்திற்கு மாறன் என டைட்டில் வைக்கப்பட்டிருக்க மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக கலக்கிய நடிகை மாளவிகா மோகனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. வழக்கமான கார்த்திக் நரேன் படங்களில் இருந்து இப்படம் மிக வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது

நிறங்கள் மூன்று

நிறங்கள் மூன்று

இந்நிலையில் கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்து வருகிறார். சரத்குமார் மற்றும் ரகுமான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு நிறங்கள் மூன்று என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படத்தில் அதர்வா கதாபாத்திரத்தின் பெயர் வெற்றி எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X