நடிக்காத டா… உன்னபத்தி உலகத்துக்கு தெரிஞ்சிபோச்சி.. லியோ வசூல்.. பிக் பாஸ் பிரபலம் சிக்கிட்டாரு!
சென்னை: பிக் பாஸ் பிரபலமும் பிரபல யூடியூப் விமர்சகருமான அபிஷேக் ராஜா லியோ படத்தின் அதிகார வசூல் அறிவிப்பு வெளியானதும் உடனடியாக விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் ரஜினியுடன் கோர்த்து ஒரு ட்வீட் போட்ட நிலையில், கார்த்திக் ரவிவர்மா அபிஷேக் ராஜாவை பங்கமாக கலாய்த்துள்ளார்.
லியோ படத்தை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில் லியோ படத்தில் மும்பை, தெலங்கானா, சேலம் எல்லாம் ஏன் காட்டுறாங்கனே தெரியல என அபிஷேக் ராஜா விமர்சித்து இருந்ததை பார்த்து கடுப்பான விஜய் ரசிகர்கள் அதற்கான காரணத்தை வீடியோ ஆதாரத்துடனே புட்டு புட்டு வைத்து அடித்து துவைத்தனர்.

லியோ படத்தை மோசமாக கலாய்த்த அபிஷேக் ராஜா தற்போது வசூல் அறிவிப்பு வெளியானதும் விஜய்யை அதிரடியாக புகழ நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என விஜய் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
விஜய் எனும் காந்தம்: பிக் பாஸ் பிரபலமும் விமர்சகருமான அபிஷேக் ராஜா லியோ படம் 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக அறிவிப்பு வெளியானதும் உடனடியாக இம்பிரஷன்களை அள்ள விஜய் எனும் காந்தம் என ட்வீட் போட்டு விஜய் ரசிகர்களிடம் வசமாக சிக்கி அடி வாங்கி வருகிறார்.

கார்த்திக் ரவிவர்மா விளாசல்: "நடிக்காத டா மச்சான்... உன்னபத்தி உலகத்துக்கு தெரிஞ்சிபோச்சி" என பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜாவின் முகத்திரையை கிழித்து தொங்க விட்டுள்ளார்.

ரசிகர்கள் கலாய்: அபிஷேக் ராஜாவுக்கு இதே வேலை தான் என்றும் ஒன்றுமே தெரியாமல் பெரிய விமர்சகர் போல விமர்சிப்பான் என்றும் அவன் ஒரு டுபாக்கூர் என்றும் பங்கமாக விஜய் ரசிகர்கள் அபிஷேக் ராஜாவை கலாய்த்து வருகின்றனர்.

மகா நடிகன்: அவன் ஒரு மகா நடிகன்னு பிக் பாஸ்லையே தெரிஞ்சிடுச்சு பிரதர் என்றும் சரியான பச்சோந்தியா இருக்கான் அபிஷேக் ராஜா என்றும் விஜய் ரசிகர்கள் அபிஷேக் ராஜா வசமாக வந்து சிக்கிய நிலையில், துவைத்து தொங்க போட்டு அடித்து வருகின்றனர். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விஜய் படம் பார்க்க நல்லா இருந்தது என தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்கள் எல்லாம் ஹேட்டர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











