Retro Trailer: இனிமே தான் சிறப்பான தரமான சம்பவம் இருக்கு.. வெளியானது ரெட்ரோ டிரைலர்!
சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் நடித்துள்ள 'ரெட்ரோ' திரைப்படத்தின் தரமான டிரைலர் வெளியாகி உள்ளது. 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
சூர்யா நடித்த கடைசியாக நடித்த கங்குவா படம் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு தோல்விதிரைப்படமானது. பிரம்மாண்டமான பொருட் செலவில் இப்படம் எடுக்கப்பட்ட போதும், ஸ்கிரீன் பிளே சரியில்லாததாலும், படத்தில் அதிகபடியாக சத்தம் இருந்ததாலும், கங்குவா படம் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. அந்த படத்திற்காக சூர்யா கடந்த இரண்டு வருடமாக கடுமையாக உழைத்து இருந்தார். ஆனால் அதற்கு பிரதிபலன் இல்லாமல் படம் மோசமான படம் என பெயர் எடுத்தது. இதனால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா.

டிரைலர்: சூர்யா முதன் முறையாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்துள்ளார். இதில், பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் இருந்து ஏற்கனவே கனிமா பாடல் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய ஹிட்டன. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று மிகப்பிரம்மாண்டமான முறையில் நடந்து வருகிறது. இதில், இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், சூர்யா இனிமே தான் சிறப்பான தரமான சம்பவம் எல்லாம் இருக்கு என பேசி இருக்கும் வசனம் இடம் பெற்றுள்ளது. மேலும், தட்டுனேன் பொளந்துடுச்சு என பேசிக்கொண்டே ரௌடிகளை வெளுவெளுவென வெளிக்கிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கி உள்ளது.

நண்பனுக்காக: அண்மை காலமாக படங்களின் டிரைலரை தனியாக ஒருவர் உருவாக்கி கொடுப்பது வழக்கமாகி வருகிறது. அந்தவகையில், 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை 'பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் உருவாக்கி உள்ளார். இந்த படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அல்போன்ஸ் புத்திரன் இருவருமே நண்பர்கள் என்பதால், தனது நண்பனுக்காக 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை அல்போன்ஸ் புத்திரன் எடிட் செய்துக் கொடுத்திருக்கிறார். 'ரெட்ரோ' படம் மே 1ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 48 நிமிடங்கள் கொண்ட படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ்: மதுரையில் பிறந்த கார்த்திக் சுப்புராஜ் விஜய் சேதுபதி நடித்த பீட்சா படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து, ஜிகர்தண்டா, மெர்குரி, பேட்ட, மகான், பேட்ட, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படத்தை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய பெரும்பாலான கதை மதுரையை மையமாக கொண்ட கதையாகத்தான் இருக்கும். தற்போது, கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் மே 1ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ், ரஜினியை வைத்து இயக்க இருப்பதாக ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சுந்தர் சியுடன் இணையப்போவதாகவும் ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.
https://youtu.be/ZnH_2I0WoFQ


Click it and Unblock the Notifications











