ரகிட.. ரகிட. ரகிட.. கார்த்திக் சுப்புராஜ் போட்ட ட்வீட்.. கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் தனுஷின் பிறந்தநாள் தினத்தில் ஜகமே தந்திரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்ற அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.
Recommended Video
பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ், கடந்த ஆண்டு ரஜினியின் பேட்ட படத்தை இயக்கி இருந்தார்.
இந்நிலையில், தற்போது தனுஷின் ஜகமே தந்திரம் ரிலீசுக்காக காத்திருக்கும் அவர், ஜகமே தந்திரம் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.

மூடிக்கிடக்கும் தியேட்டர்கள்
மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் ஜூலை மாதம் ஆரம்பித்தும் எப்போது திறக்கும் என்ற அறிகுறி ஏதும் தெரியாத நிலையில் மூடிக்கிடக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு காலாண்டே தியேட்டர் ஓனர்களுக்கும் சினிமா துறையினருக்கும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது. தியேட்டர் திறப்புக்காக தனுஷின் ஜகமே தந்திரம் படமும் காத்துக் கிடக்கின்றது.

தனுஷ் மாதம்
ஜூலை மாதம் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாத கடைசியில் ஜூலை 28ம் தேதி தனுஷின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால், தனுஷ் ரசிகர்கள் இன்றே தனுஷின் பிறந்தநாள் போல சமூக வலைதளங்களில் தங்கள் டிரெண்டிங்கை தொடங்கி விட்டனர். கார்த்திக் சுப்புராஜும் அவர்களுக்கு தீனிப் போடும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எதிர்பார்த்த மாதிரியே
இன்று காலை 9 மணிக்கு புதிய அறிவிப்பு வெளியாகும் என நேற்று கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் அறிவித்தபோதே, ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அந்த கணிப்பு வீண் போகாதபடி தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், வரும் ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்தநாள் அன்று "ரகிட ரகிட ரகிட" ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்
ஜகமே தந்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் கிடைத்துள்ள நிலையில், #JagameThandhiram என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி தனுஷ் ரசிகர்கள் தங்களின் உற்சாகத்தை கொண்டாடி வருகின்றனர். நடிகர் தனுஷுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை இப்போதே தெரிவிக்கவும் அவரது ரசிகர்கள் தொடங்கி விட்டனர்.

வெளிநாட்டிலும் ரசிகர்கள்
ஜூலை மாதத்தை தனுஷின் பிறந்தநாள் மாதமாகவே கொண்டாட முடிவு செய்துள்ளனர் தனுஷ் ரசிகர்கள். தனுஷ் பேசிய வீடியோக்கள், தனுஷின் அரிய புகைப்படங்கள், பிரான்ஸில் ரசிகை ஒருவர், மாரி படத்தின் ஷூட்டிங்கின் போது அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய புகைப்படங்கள் என பலவற்றையும் ஷேர் செய்து டிரெண்ட் செய்கின்றனர்.

ஜகமே தந்திரம்
தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சஞ்சனா நடராஜன், கலையரசன் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜகமே தந்திரம் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணின் இசையில் ரகிட ரகிட ரகிட தனுஷின் பிறந்தநாள் பரிசாக தெறிக்கப்போகிறது.


Click it and Unblock the Notifications











