Jigarthanda double X :கொளுத்திவிட்ட ஜிகர்தண்டா டீம்.. தீபாவளி ரேசில் பங்கேற்கும் கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : கடந்த 2014ம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானது ஜிகர்தண்டா படம்.

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது ஜிகர்தண்டா 2. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Karthik Subbaraj announced Jigarthanda double X movie release update

தீபாவளி பந்தயத்தில் இணைந்த ஜிகர்தண்டா 2 :நடிகர்கள் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியான ஜிகர்தண்டா படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. மதுரையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இந்தப்படம் அவரது கேரியர் பெஸ்டாக அமைந்தது.

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனே இந்தப் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக இந்தப் படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தொடர்ந்து சூட்டிங் நடந்து வந்தது.

Karthik Subbaraj announced Jigarthanda double X movie release update

இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் கிளிம்ப்சையும் வெளியிட்டுள்ளனர். இதில் கரியா டாக்கீஸ் என்ற திரையரங்கின் முன்பு ஒருவர் அமர்ந்திருக்க அந்த திரையரங்கின் முன்பு குண்டு போடப்பட்டு தீப்பற்றி எரிகிறது. தொடர்ந்து இதேபோல தீபாவளிக்கு திரையரங்குகள் தீப்பிடிக்கும் என்று அந்த கிளிம்ப்சில் காணப்படுகிறது.

மேலும் தந்தம் போன்ற அமைப்பிலான நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த நபர், குண்டை வெடிக்க செய்துவிட்டு கேஷுவலாக காலாட்டிக் கொண்டும், கையில் நெட்டி முறித்துக் கொண்டும் இருக்கிறார். அது ராகவா லாரன்சாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்கின் முன்பு கூடியிருக்கம் கூட்டம் தலைதெறிக்க ஓடும் நிலையில், சிலர், அங்கேயே ரிலாக்சாக அந்த குண்டு வெடிப்பை பார்த்துக் கொண்டிருக்கதாக இந்த கிளிம்ஸ் காணப்படுகிறது.

Karthik Subbaraj announced Jigarthanda double X movie release update

ஏற்கனவே நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர், கார்த்தியின் ஜப்பான் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் தீபாவளி ரேசில் உள்ள நிலையில், தற்போது மிகுந்த எதி ர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள ஜிகர்தண்டா படமும் அதில் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்காக கண்டிப்பாக ரசிகர்கள் காத்திருக்கலாம். காரணம் படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய பாதிப்பு அதிகம். இந்த எதிபார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X