ஷங்கரின் கேம் சேஞ்சர் பிளாப்.. யாரை குறை சொல்கிறார் கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படம் மே 1ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு படம் குறித்து பேசினார்கள். இந்த விழாவில் பேசிய சூர்யாவின் அப்பா, தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு முன் எவண்டா சிக்ஸ் பேக் வைத்தது? என கூறியிருந்தார். எதுடா சாக்கு அதை சர்ச்சையாக்கலாம் என காத்துக்கொண்டு இருக்கும் சோசியல் மீடியாக்கள் இதை கொளுத்திப்போட்டு சர்ச்சையாக்கிய நிலையில்,
அது பற்றி பேசிய நடிகர் விஷால், முதலில் தனுஷ் தான் பொல்லாதவன் படத்தில் சிக்ஸ் பேக் வைத்தார். அதன் பின் நான் வைத்திருந்தேன் என பதிலடி கொடுத்து இருந்தார்.

Game Changer shankar Karthik Subbaraj

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்: இப்படி ரெட்ரோ படம் வெளியாவதற்கு முன், சில சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்து பல ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அதில், கார்த்திக் சுப்புராஜின் கதையான கேம் சேஞ்சர் தோல்வி குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், கதையின் ஒன்லைனை மட்டும் நான் ஷங்கர் சாரிடம் கொடுத்தேன். உறுதியான கொள்கைகளைக் கொண்ட ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, அரசியல்வாதியாக மாறுவது பற்றிய கதை அது. ஷங்கர் சாருக்குக் கதையைக் கொடுத்தபோது, அவர் அதை எப்படி விரிவுபடுத்துவார் என்று பார்க்க எனக்கு ஆர்வமாக இருந்தது. ஆனால், கடைசியில் அது முற்றிலும் மாற்றப்பட்டு கதையே மாறிவிட்டது.

பல எழுத்தாளர்கள் அந்தப் படத்தில் பணியாற்றி இருந்தார்கள். இதனால், திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. கதையிலும் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், சினிமாவுக்காகச் செய்யப்படும் மாற்றங்களை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை யாராலுமே கணிக்க முடியாது. இந்தப் படம் ஏன் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை என்று யாராலும் சொல்ல முடியாது என்று கேம் சேஞ்சர் பட தோல்வி குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்து இருந்தார்.

Game Changer shankar Karthik Subbaraj

கேம் சேஞ்சர்: நடிகர் ராம் சரணின் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு பான் இந்திய திரைப்படமாக கேம் சேஞ்சர் படம் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தில், ராம் சரண் ஹீரோவாகவும், எஸ்.ஜே. சூர்யா வில்லனாகவும், கதாநாயகியாக கியாரா அத்வானியும் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்தில் பிரம்மாண்டம் தான் இருக்கிறது. கதை இல்லை என முதல் நாளிலேயே வந்த நெகட்டிவ் விமர்சனத்தால், படத்திற்கு வரவேற்பு கிடைக்காமல் தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் தான் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X