எதுவுமே செட் ஆகல.. மீண்டும் அந்த படத்தை கையிலெடுத்த கார்த்திக் சுப்புராஜ்.. தரமான சம்பவம் லோடிங்கா?

சென்னை: விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ்.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்பட இயக்குநராக இருந்து கடந்த 2012ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.

அடுத்ததாக 2012ம் ஆண்டு அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ்

மதுரையில் பிறந்து வளர்ந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய காட்சிப்பிழை குறும்படம் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு அவரை கொண்டு சேர்த்தது. அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின் பண்ண முடியாமல் வெளியேறிய அவர், ஜிகர்தண்டா படத்தை முதலில் எடுக்க நினைத்தார். ஆனால், அதற்கு ஏற்ற பட்ஜெட் அமையாததால், சிறிய பட்ஜெட்டில் விஜய்சேதுபதியை வைத்து பீட்ஸா படத்தை இயக்கி முதல் படத்தின் மூலமே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார்.

ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா

மதுரையின் ஃபேமஸான ஜிகர்தண்டா குளிர்பானத்தின் பெயரிலேயே அனைத்து கலவைகளும் இருக்குமாறு ஒரு படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான அந்த திரைப்படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தை என்னிடம் சொல்லி இருந்தால், நானே நடித்திருப்பேன் எனக் கூறி பேட்ட படத்தை இயக்கும் வாய்ப்பையே கொடுத்தார்.

யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸ்

யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸ்

இயக்குநரான சித்தார்த் மதுரையில் உலா வரும் பிரபல தாதாவை எப்படி காமெடி நடிகராக மாற்றுகிறார் என்கிற வித்தியாசமான கிளைமேக்ஸ் ஒட்டுமொத்த ரசிகர்களையும் படத்தை பார்க்கவும் பாராட்டவும் வைத்தது. சிறந்த நடிப்பிற்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கும் இந்த படத்திற்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பெருசா வொர்க்கவுட் ஆகல

பெருசா வொர்க்கவுட் ஆகல

பீட்சா, ஜிகர்தண்டா படங்களுக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றாலும், கமர்ஷியல் வெற்றி அடையவில்லை. மெர்க்குரி திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது. மேலும், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் வெளியான படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை.

Recommended Video

Ponniyin Selvan புத்தகத்தை நெஞ்சில் சுமந்து நடிச்சோம் , JayamRavi speech | PS1 Song lauch *Kollywood
ரஜினியின் பேட்ட

ரஜினியின் பேட்ட

இந்த வரிசையில் தப்பித்த படம் என்று சொல்ல வேண்டும் என்றால், அது ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் தான். ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் ஜிகர்தண்டா அளவுக்கு பெயர் வாங்க வில்லை என்றாலும், கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

ஓடிடி ரிலீஸ்

ஓடிடி ரிலீஸ்

தனுஷின் ஜகமே தந்திரம் மற்றும் சியான் விக்ரமின் மகான் என இரு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாகின. ஜகமே தந்திரம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. மகான் திரைப்படம் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் நடிப்புக்காக பாராட்டுக்களை பெற்றது. ஆனால், இன்னமும் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த தரமான சம்பவம் என்று சொல்ல முடியாத அளவுக்குத் தான் அந்த படம் அமைந்தது.

8 ஆண்டுகள் கொண்டாட்டம்

8 ஆண்டுகள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக திகழும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் ரிலீஸாகி இன்றோடு 8 ஆண்டுகளை கடந்துள்ளது. அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், புதிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்தண்டா படத்தின் மேக்கிங் காட்சிகள் அந்த வீடியோவில் நிறைந்துள்ளன.

ஜிகர்தண்டா 2

ஜிகர்தண்டா 2

ஜிகர்தண்டா படத்தின் மேக்கிங் காட்சிகளை காட்டியபடிய ஜிகர்தண்டாவை போடும் வீடியோவை காட்டி வந்த கார்த்திக் சுப்புராஜ், கடைசியாக ஒரு ஜிகர்தண்டா பக்கத்தில் இன்னொரு ஜிகர்தண்டாவை வைத்து இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாக அந்த வீடியோவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தோம் என ரசிகர்களும், புதிய கதை கிடைக்காத நிலையில், ஹிட் அடித்த படத்தின் பின்னாடி ஓடுவதே இந்த இயக்குநர்களுக்கு வேலையாக போய்விட்டது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X