மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் உடன் இணைந்த பிரபல ஹீரோ.. யார் தெரியுமா?

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் ஸ்டோன் பென்ச் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 5வது படத்தை வெற்றிகரமாக தயாரிக்க துவங்கியுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவான மேயாத மான் படத்தில் நாயகனாக நடித்த வைபவ் தான் மீண்டும் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பில் இணைந்துள்ளார்.

இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் உதவி இயக்குநரான அசோக் வீரப்பன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

மேயாத மான்

மேயாத மான்

சென்னை 28 படத்திற்கு பிறகு வைபவ் நடிப்பில் வெளியான படங்கள் பெரியளவில் பேசப்படவில்லை. கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் படம் வைபவுக்கு ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் வைபவ். இந்த படத்திற்காக வித்தியாசமான லுக்கிற்கும் வைபவ் மாறியுள்ளார்.

முதல் மாணவன்

முதல் மாணவன்

பிரபல இயக்குநர்களின் உதவி இயக்குநர்கள் இயக்குநர்களாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களாக மாறி வருகின்றனர். அந்த வரிசையில், கார்த்திக் சுப்பராஜ் பள்ளியில் இருந்து முதல் மாணவராக அசோக் வீரப்பன் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். பீட்சா மற்றும் ஜிகர்தண்டா படங்களில் இவர் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.

நட்பே துணை நாயகி

நட்பே துணை நாயகி

நட்பே துணை படத்தில் கேரளத்து பெண்ணாக ஹிப் ஹாப் தமிழாவுக்கு ஜோடியாக நடித்து பல இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகை அனாகா தான் இந்த படத்தில் வைபவ்வுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், இளையராஜா எனும் கிராமிய பாடகர், வைபவ்வுக்கு நண்பராக இந்த படத்தில் அறிமுகமாகிறார்.

பூஜை போட்டாச்சு

இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வைபவ்வின் அடுத்த படம், தனது பேனரில் 5வது புரொடக்‌ஷனாக வெளியாகிறது என்றும் தனது உதவி இயக்குநர் அசோக் வீரப்பன் இந்த படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சநா 30

சநா 30

கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்த்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன், வைபவ் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் 30வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சந்தோஷ் நாராயணன் அரை சதம் கடக்க வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X