Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்!
நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் டைட்டில் போஸ்டரை இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்பராஜ் நாளை வெளியிடுகிறார்.
சென்னை: கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், நாளை தனது 27வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ஸ்டோன் பெஞ்ச் சார்பில் கார்த்திக் சுப்பராஜ், கீர்த்தி சுரேஷின் 24வது படத்தை தயாரிக்கிறார். நாளை அந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பகல் 11.11 மணிக்கு வெளியிடுகிறார்.
27 வயது 24 படம்
அக்டோபர் 17, 1992ம் ஆண்டு சென்னையில் பிறந்த கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
2015ம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷிற்கு, 2016ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என தனது 27 வயது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் 24வது படத்தின் டைட்டில் அறிவிப்புக்காக காத்திருக்கிறார்.
ஓவர் ஆக்டிங் டு தேசிய விருது
சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா என தொடர்ந்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தனுஷ், சூர்யா, விஜய், விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், பெரும்பாலும் ஓவர் ஆக்டிங் என டிரோல் செய்யப்பட்டு வந்தார். இந்த நிலையில், நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் தனது ஓவர் ஆக்டிங் இமேஜை ஓரங்கட்டி விட்டு தேசிய விருது நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.
ரஜினிக்கு ஜோடி
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 168 திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜோதிகா நாயகிகளாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று கீர்த்தி சுரேஷ் காத்துக் கொண்டிருக்கிறார்.
பிறந்த நாள் பரிசு
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் மேயாத மன், மெர்க்குரி படங்களை தொடர்ந்து மூன்றாவது தயாரிப்பாக கீர்த்தி சுரேஷின் 24வது படத்தை தயாரிக்கிறது.
கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் ஒரு படத்தையும் தெலுங்கில் மிஸ் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் தலைப்பை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் பரிசாக அவரது ரசிகர்களுக்கு நாளை காலை 11.11 மணிக்கு கார்த்திக் சுப்பராஜ் அறிவிக்க உள்ளார்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!