Ghibli ஃபீவர் சூர்யாவையும் விடல.. ரெட்ரோ டப்பிங்கை முடிச்ச அறிவிப்பு எப்படி வந்திருக்கு பாருங்க!

சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படம் ரெட்ரோ. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்ததை, Ghibli ஸ்டைலில் அப்டேட் கொடுத்து அசத்தி உள்ளார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சூர்யா தற்போது தனது 45 வது படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்த படம் இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு அய்யனார் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் சென்னை என படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் என்றால் அது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் தான். இந்த படத்தின் டீசர் படத்தை அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக காட்டினாலும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை தரமான ரொமான்டிக் படம் எனக் கூறுகிறார். டீசரில் சூர்யாவுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கெட்டப்களில் இருப்பதால் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு உள்ளார்கள். இதுவரை படக்குழு சார்பில் டீசர், கண்ணாடிப் பூவே மற்றும் கனிமா என இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Karthik Subbaraj Shares Suriya Retro Movie Dubbing Update In Ghibli Style

ரெட்ரோ: இந்த இரண்டு பாடல்களும் டீசரும் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் குறிப்பாக, கனிமா பாடல் இணையவாசிகள் மத்தியில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் படத்தின் புரோமோசன் பணிகள் இன்னும் முழு மூச்சாக தொடங்கப்படவில்லை என்றாலும், ரசிகர்களுக்கு அவ்வப்போது ஏதாவது அப்டேட் கொடுத்துக் கொண்டுதான் உள்ளார்கள். இப்படியான நிலையில் ரெட்ரோ படத்தின் டப்பிங் குறித்த அப்டேட் படக்குழு சார்பில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

Karthik Subbaraj Shares Suriya Retro Movie Dubbing Update In Ghibli Style

Ghibli : அவர் வெளியிட்டுள்ள அப்டேட்டில் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், சூர்யாவும் அவருடன் இருக்கிறார். அதில் சூர்யா பேசும்போது, " ரெட்ரோ டப்பிங் முடுஞ்சுது கட் அண்ட் ரைட்டு" என பேசுகிறார். அதற்கு பின்னர் டப்பிங்கின் போது சூர்யாவுக்கு அருகில் கார்த்திக் சுப்புராஜ் நின்று கொண்டு இருக்கிறார். இருவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான நிலையில் இருவரும் சிரித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை Ghibli ஸ்டைலில் மாற்றி செம அப்டேட்டான அப்டேட் கொடுத்துள்ளார்கள்.


ரசிகர்கள்: இவர்களின் இந்த Ghibli ஸ்டைல் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ தற்போது சூர்யா ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் இதை வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். இந்த அப்டேட் சூர்யா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Karthik Subbaraj Shares Suriya Retro Movie Dubbing Update In Ghibli Style

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X