Retro: ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று.. கனிமா பாடலின் இன்னொரு வெர்ஷன்.. சந்தோஷ் நாராயணன் சம்பவம்!
சென்னை: சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த 1ஆம் தேதி வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் அசத்தி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள கனிமா பாடலின் இன்னொரு வெர்ஷனை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரெட்ரோ படம் சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த படம். காரணம் இதற்கு முன்னர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வி படமாக மாறியது. இதனால் ரசிகர்கள் அப்செட் அடைந்தார்கள். இந்நிலையில்தான் ரசிகர்கள் நம்பிக்கை மொத்தமாக ரெட்ரோ படத்தின் மீது விழுந்தது.
இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை சொல்லி வந்தாலும், படத்திற்கு நாளுக்கு நாள் கலெக்ஷன் கூடுக்கொண்டே போகிறது. இது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பார்க்க மற்றொரு காரணம் படத்தின் இசையமைப்பாளர், சந்தோஷ் நாராயணன். அவரது இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்து இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் பிரச்னை இருந்தாலும், ரசிகர்களை படத்தில் மிகவும் கனெக்ட் செய்ய வைத்தது இவரின் இசை தான் என்று கூறுகிறார்கள்.

சந்தோஷ் நாராயணன்: ஏற்கனவே, படம் ரிலீஸ்க்கு முன்னர், ரெட்ரோ படத்தில் இருந்து வெளியிடப்பட்ட, கண்ணாடிப் பூவே, கனிமா போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக கனிமா பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை இந்தியா முழுவதும் பெற்றது. பல திரைப்பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் இந்த பாடலை ரீல்ஸ் செய்து வெளியிட்டார்கள்.
கனிமா: படம் பார்த்த ரசிகர்கள் பலரும் கனிமா பாடல் படத்தில் முழுமையாக இல்லை என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார்கள். கனிமா பாடலை முழுவதுமாக தியேட்டரில் பார்க்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அந்த பாடலுக்கு நடுவே சண்டைக் காட்சிகள், டயலாக்குகள் என திரைக்கதையில் ஒரு மாதிரி செய்து வைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். பாடல் முழுவதும் இல்லாதது ஏமாற்றம் தான். குழந்தைகளுக்கு அந்த பாடல் மிகவும் பிடித்திருந்தது. பாடல் வந்ததும் குழந்தைகள் எழுந்து நடனமாட தொடங்கிவிட்டனர். ஆனால் பாடல் முழுவதுமாக இல்லை என்பது வருத்தமாக உள்ளது என்று சிலர் தெரிவித்தனர்.

இன்னொரு வெர்ஷன்: இந்நிலையில் ரெட்ரோ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், கனிமா பாடலின் இன்னொரு வெர்ஷனை பகிர்ந்துள்ளார். மேலும், இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் உருவாக்கிய இன்னொரு வெர்ஷன் தான் இது என்று தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இருக்கும் அந்த வீடியோ வேற லெவலில் இருப்பதாகவும். இந்த வெர்ஷனை படத்தில் பயன்படுத்தி இருக்கலாம் எனவும் சிலர் கமெண்ட் அடித்து வருகிறார்கள். கார்த்திக் சுப்புராஜின் பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











