காக்கா கதை சொன்ன ரத்னகுமார்.. படத்தை தயாரிச்சு மேடையிலேயே பொளந்த ரஜினி ரசிகர்!
சென்னை: மேயாத மான், ஆடை போன்ற தரமான படங்களை கொடுத்த இயக்குநர் ரத்ன குமார். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் 29. இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை தயாரித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது ரத்னகுமார் குறித்து குறிப்பிட்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெறித்தனமான ரஜினி ரசிகர். ரஜினியை வைத்து பேட்ட என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கி உள்ளார். தனது படங்களில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறது, அங்கெல்லாம் ரஜினியின் புகழ் பாடி வைத்திருப்பார். இப்படி இருக்கும்போது இவர் 29 படத்தை தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு விழாவில் பேசுகையில் படத்தின் இயக்குநர் ரத்னகுமாரை நேரடியாக அட்டாக் செய்து பேசியுள்ளார்.

அதாவது, ரத்ன குமார் மிகவும் திறமையான இயக்குநர். மேயாத மான் படத்தை நான் தயாரித்த பின்னர், இந்த படத்தின் கதையை என்னிடத்தில் சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. எப்போது இந்த கதையை படமாக்கினாலும் அதை நாங்கள் தான் படமாக்குவோம் என்று தெரிவித்திருந்தோம். ரத்ன குமாரை எனக்குப் பிடிக்கும். அதிகம் எழுதுவார். அதிகம் பேசுவார். வெளியேவும் அதிகம் பேசுவார் எனக்கு அவற்றில் சில பிடிக்காது" என்று பேசினார்.
காக்கா கதை: கார்த்திக் சுப்புராஜ் இவ்வாறு பேசுவதற்கு காரணம், ரத்ன குமார் லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசுகையில், நாம் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசிச்சா கீழ வந்து தான் ஆகனும்" என்று தெரிவித்தார். இவர் இவ்வாறு பேசியது என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அட்டாக் செய்யும் விதமாக இருப்பதாக பலரும் தெரிவித்தனர். அதாவது ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும் போது காக்கா கழுகு கதை சொன்னார். அப்படி அவர் சொன்னதில் காக்கா என்று விஜய்யை தான் மறைமுகமாக விமர்சிக்கிறார் என்று பலரும் விமர்சித்தார்கள். அதனால்தான் விஜய் ரசிகரான ரத்னகுமார் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி உள்ளார் என்று பலரும் தெரிவித்தார்கள்.

பதிலடி: இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரத்னகுமாரின் படத்தை தயாரித்து விட்டு, அவரையே மேடையில் வைத்துக் கொண்டு, அவரது முகத்திற்கு நேராகவே கார்த்திக் சுப்புராஜ் பதிலடி கொடுத்துள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











