Karthik Subbaraj - ஒரு விஷயத்தை உடைத்து மிகப்பெரிய ஹீரோவானவர் ரஜினி.. கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்
சென்னை: Karthik Subbaraj (கார்த்திக் சுப்புராஜ்) ரஜினிகாந்த் ஒரு விஷயத்தை உடைத்து மிகப்பெரிய ஹீரோவாக மாறியிருக்கிறார் என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் நாளிலிருந்தே தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துவருகின்றனர்.

செம நடிப்பு: முக்கியமாக எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் ஆகிய இருவரும் படத்தை இரண்டு தூண்களாக தாங்கியிருக்கிறார்கள் என்றும் இரண்டு பேரின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கிறது என்றும் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜின் மேக்கிங்கும் பழங்குடியினத்தை திரைக்கதையில் கனெக்ட் செய்த விதத்தையும் பாராட்டிவருகின்றனர்.
ரஜினியின் பாராட்டு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் கார்த்திக் சுப்புராஜையும், ஜிகர்தண்டா படத்தையும் வெகுவாக பாராட்டியிருந்தார். அதேபோல் படக்குழுவை நேரில் அழைத்தும் தனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்தார். இந்தப் படத்தை உருவாக்குவதற்கு ரஜினிகாந்த்தான் இன்ஸ்பிரேஷனாக இருந்தார் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் படக்குழு: இந்நிலையில் ஜிகர்தண்டா 2 படக்குழு இன்று திருச்சிக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தது. அதனை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சுப்புராஜ், "ஜிகர்தண்டா 2வை மக்கள் ரசித்து பார்க்கிறார்கள். காடுகளில் வாழ்ந்த மனிதர்கள் சந்தித்த; சந்தித்துவரும் பிரச்னைகள் ஆகியவை குறித்து பேச வேண்டும் என இப்படத்தில் கூறியிருக்கிறோம். மக்கள் அதை உணர்ந்து ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.
உடைத்தவர் ரஜினிகாந்த்: 1970 காலகட்டங்களில் வெள்ளையாக யார் இருக்கிறாரோ அவர்தான் நடிகராக முடியும் என்கிற மனநிலை இருந்தது. ஆனால் அதை உடைத்து மிகப்பெரிய ஹீரோவாக மாறியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். அந்தக் காலகட்டத்தை மையப்படுத்திதான் இப்படம் எடுக்கப்பட்டது. சொல்லப்போனால் இப்படத்துக்கு அதுதான் தொடக்கப்புள்ளியாகவும் இருந்தது.
ரஜினிகாந்த் இந்தப் படத்தை பார்த்துவிட்டார். படம் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் எங்களிடம் கூறினார். சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என எந்த வித்தியாசமும் இல்லை நல்ல படங்களுக்கு தமிழ்நாடு ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











