பேட்ட பராக்.. கார்த்திக் சுப்புராஜூவுக்கு அடித்த ஜாக்பாட்.. ரெட்ரோ பட விழாவில் சர்ப்ரைஸ் இருக்கு
சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே ரசிகர்களின் மனதை கட்டி போட்டிருக்கும் கனிமா, கண்ணாடி பூக்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கனிமா பாடலுக்கு நடனம் ஆடாத பிரபலங்களே இல்லை. அந்த அளவிற்கு சமூகவலைதளங்களை கனிமா பாடல் ஆக்கிரமித்திருக்கிறது. ரெட்ரோ படத்தில் பிஸியாக இருக்கும் கார்த்திக் சுப்பராஜூவுக்கு அடுத்த ஜாக்பாட் அடித்திருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்போடு சூர்யா காத்திருக்கிறார். மேலும், இப்படத்தில் சூர்யாவின் கெட்டப்புகளும் வசீகரித்துள்ளது. மதுரையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கி்ன்றனர். நேற்று திடீரென சூர்யா அவரது ரசிகர்களை சந்தித்து பேசினார். இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகின. அதேபோன்று கங்குவா படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட மேடை: கங்குவா படத்திற்கு பிறகு சூர்யாவின் ரசிகர்கள் ரெட்ரோ படத்தை காண பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணாடி பூக்கள், கனிமா பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கி வருகிறது. சினிமா பிரபலங்கள் முதல் சின்னத்திரை நடிகர்கள் வரை இப்பாடலை வைஃப் மோடில் டிரெண்டிங்காக்கி வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுவதால் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் காத்திருப்பது போன்ற உணர்வை தந்திருக்கிறது. பூஜா ஹெக்டே நடனத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள் கண்டிப்பாக சர்ப்ரைஸான ஆட்டமும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை சம்பவம்: கார்த்திக் சுப்பராஜ் படங்களில் மதுரையை மையமாக வைத்து படங்களை எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். இவர் இயக்கிய பீட்சா படத்தை தவிர்த்து ஜிகர்தண்டா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகான், பேட்ட, ஜகமே தந்திரம் வரைக்கும் மதுரையில் இருந்து கதை தொடங்குவதாக ஆரம்பிப்பார். ரசிகர்கள் ரசிக்கும் வகையில்அ அவரது ஸ்பெஷல் ட்ரீட் எப்போதும் இருக்கும். குறிப்பாக ட்விஸ்ட் காட்சிகளும் தரமாக அமைந்திருக்கும். ஆனால் கேங்ஸ்டர் பார்முலாவை தொடாமல் இவரது படங்கள் இருந்ததில்லை. துள்ளலான ஆட்டம் பாட்டம் என கமர்ஷியல் படங்களாக அமைந்திருக்கும். ரெட்ரோ படத்தின் வெற்றியை ருசிக்க காத்துக்காெண்டிருக்கும் இந்த சூழலில் மீண்டும் ஒரு ஜாக்பாட் அவருக்கு அடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஜினி படம்: நடிகர் ரஜினி கூலி படத்தை முடித்த கையொடு ஜெயிலர் 2 படத்தில் மிக தீவிரமாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகளும் சென்னை, கோவை, கேரளா என அடுத்தடுத்து லொகேஷன்களில் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் என்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி தனது சுய சரிதையை எழுதுவதாக தகவல் வெளியானது. அடுத்து அவரை வைத்து இயக்கும் இயக்குநர் யார் என்ற அப்டேட்களும் வெளியாகாமல் இருந்தன. இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினியை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. பேட்ட படத்தின் போதே இப்படம் குறித்த கதையை கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருக்கிறாராம். அந்த கதையைத்தான் ரஜினி ஓகே சொல்லியிருப்பதாகவும் ஜெயிலர் 2 பிறகு கார்த்திக் சுப்பராஜ் படம் தான் தகவல்கள் கசிந்துள்ளன.
ரஜினியின் தீவிர ரசிகன்: திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருக்கின்றனர். ஆனால், கார்த்திக் சுப்பராஜ் வெறித்தனமாக ரஜினி பேன் என்பது அனைவருக்கும் அறிந்ததே. அவர் இயக்கிய பேட்ட படத்தில் முழுக்க முழுக்க அது ரஜினி படமாகவே இருந்திருக்கும். இப்படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடல் தொடங்கி, பேட்ட பராக் வரைக்கும் ரஜினிக்கான பாடிலாங்குவேஜ் நடை உடை என தூள் கிளப்பியிருப்பார். லோகேஷ் கனகராஜ் முன்பே கார்த்திக் சுப்பராஜ் ஃபேன் பாய் படத்தை எடுத்து ரசிகர்களின் பேரன்பை பெற்றிருப்பார். ரஜினி நடித்த முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ் ஏதும் இல்லாத ஒரு ரஜினியின் படமாக பேட்ட இருந்திருக்கும். இப்படத்திற்கு ரஜினியின் ரசிகர்கள் தந்த வரவேற்பும் வியக்க வைக்கும் வகையில் இருந்தன.

ஃபேன் பாய் படம்: ஏற்கனவே அப்படியொரு மாஸ் கமர்ஷியல் படத்தை கொடுத்தவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தரமான ஃபேன் பாய் படமாக இருக்கும். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி ஃபேன் படமாக வந்து வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், இதை தொடங்கி வைத்தவர் கார்த்திக் சுப்பராஜ் என்பது மிக முக்கியமான வரலாறு. ரஜினியின் ஸ்டைலை ரசித்தவர்களுக்கு அவரது நடிப்பையும் ரசிக்க வைத்தவர் கார்த்திக் சுப்பராஜ். 2019ஆம் ஆண்டு வெளியான பேட்ட படத்திற்கு பிறகு 6 வருடங்கள் கழித்து இணையுவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படம் பேட்ட 2 ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. படம் குறித்த அப்டேட்டை இன்று நடைபெறும் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்பராஜ் அறிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், கார்த்திக் சுப்பராஜ் மீண்டும் மதுரை சம்பவத்தை செய்ய காத்திருக்கிறார். ரஜினி இணைந்தால் அது கொலை மாஸ் தான் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: ஜெயிலர் 2, கூலி படத்தை தாண்டிய எதிர்பார்ப்பை கார்த்திக் சுப்பராஜ் தந்திருக்கிறார். மீண்டும் ஃபேன் பாய் படத்தை பார்க்க ஆவலோடு இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மதுரைக்காரன் சம்பவம் செய்யாமல் போகமாட்டார் எனவும் கார்த்திக் சுப்பராஜை புகழ்ந்து பேசி வருகின்றனர். மேலும், இதற்கு ரஜினியின் உடல் ஒத்துழைப்பும் தேவைப்படுவதாகவும், அவர் ரெஸ்ட் இல்லாமல் அடுத்தடுத்து படங்களில் நடிப்பது ரசிகர்களுக்காக தான் பலரும் தெரிவிக்கின்றனர். எனவே, கார்த்திக் சுப்பராஜ் படத்தில் ரஜினி இணைந்தால் மாஸான கொண்டாட்டம் தான் என்கின்றனர். மேலும், பேட்ட படத்தில் ரஜினி, சிம்ரன், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி என ஒரு கலக்கலான காம்பினேஷனாக இருந்ததாகக் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











